மடவளை மதீனா மத்திய கல்லூரியில் தொழிற்நுட்ப பாடநெறி அறிமுகம்
(JM.HAFEEZ)
மகிந்தோதயத்திட்டத்தின் கீழ் உயர்தர வகுப்பு களில் தொழிற் நுட்பப் பாடத்தை அறிமுகம் செய்யும் வைபவம் நாளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதிலொரு கட்டமாக வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள மடவளை மதீனா மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வைபவத்தில் (15.7.2013) தொழில் நுட்ப வகுப்பை வத்துகாமம் கோட்டக் கல்வி அதிகாரி முத்துகுமாரன ஆரம்பித்து வைப்பதையும் கல்லூரி அதிபர் செல்வி நூறுல் ஹிதாயா மாணவ மாணவிகளைப் பதிவு செய்து உரையாற்றுவதையும் காணலாம்.
கண்டி மாவட்டத்தில் 34 பாடசாலைகளில் இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டபோதும் வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள இரு பாடசாலைகளான மடவளை மதீனா மத்திய கல்லூரிக்கும், இரத்நாயக்கா மத்திய கல்லூரிக்கும் மட்டுமே கண்டி மாவட்டத்தில் ஆய்வு கூட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment