இன, மத ரீதியாக சிலர் தீ மூட்டுகின்றனர் - நாம் அணைப்பாளர்களாக செயற்படுவோம் - அமைச்சர் வாசு
(M.M.A.M.Rilan)
இன, மத ரீதியாக மக்கள் பிரிவினர்களிடையே தீ மூட்டுவோர் இந்த உலகம் பூராகவும் சகல நாடுகளிலும் உள்ளனர். நாம் அந்த தீயை அணைப்பாளர்களாக செயற்படுவோம். இந்த பிரச்சினையானது உலகில் அனைத்து நாடுகளிலும் காணப்படுகின்றது ஆகவே, ஏனைய இன மக்களை இந்த நாடுகளிலிருந்து வெளியேற்றுவதை அத் தேசத்திற்கு உரிமையுள்ள இனங்களில் தீர்வானது என அவர்கள் கூறுகின்றனர். அதற்கு எதிராக அந்த நாடுகளில் போராடுகின்ற இயக்கங்களும் உள்ளன. அவை இன ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு எதிராக அதனை அணைக்கும் தீ அணைப்பு இயக்கங்களும் உள்ளன. எமது நாட்டில் நாமே அந்த தீ அணைப்பாளர்களாக செயற்படகின்றோம் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார அவர்கள் கூறுகின்றார்.
அமைச்சர் இக்கருத்துக்களை ஜுலை 15 முதல் 21 வரை பிரகடனப்படுத்தியுள்ள சமூக ஓருமைப்பாட்டு வாரத்தின் விழாவில் பங்குபற்றுகையில் குறிப்பிட்டார். இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து கருத்துக்கள் தெரிவித்த அமைச்சர்,
வருமான நிலை எதுவாயினும், தொழில் நுட்பம் மற்றும் தொழில் கல்வி இல்லாவிடின் கற்கை நெறியினூடாக கல்வி உரிமைகளை அனைவருக்கும் பெற்றுக் கொடுப்பதே சுதந்திர கல்வியின் நோக்கமாகும். சமூகத்தின் பிரிவினைகளை நீங்குவதற்கு கல்வியானது முக்கிய பங்களிப்பு வகிக்கின்றது என்பதை நாம் அறிவோம். அவ்வாறு இல்லையெனில் அவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படுவதை எம்மால் நீக்க முடியாது. ஆகவே பிளவுபட்டு காணப்படும் சகல குடும்பத்துக்கு, சமூகப் பாதுகாப்பினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அனைத்து குடும்பத்துக்கும் தவணை முறைகட்டணமாக வீடு ஒன்றினை பெற்றுக்கொடுப்பதற்கு உரிமை இருக்க வேண்டும். தவணை முறையாக கொடுப்பனவை மேற்கொண்ட சகல குடும்பங்களுக்கு வீடொன்றை உருவாக்கும் வசதியானது அன்று காணப்பட்டது. அது சமூக வீட்டுத்திட்ட செயல் முறையாகும். அன்று காணப்பட்ட அந்த சமூக வீட்டுத்திட்ட செயன்முறையானது நவீன பொருளாதாரத்துடன் இன்று அற்றுப்போய்விட்டது.
இலவச சுகாதார சேவையின் மூலம் அனைவரது சுகாதார தேவைப்பாட்டை பூர்த்தி செய்வது அத்தியவசியமானதாகும். இன்று அரசாங்கமானது சுகாதார பிரிவினூடாக அதிகமான சேவைகளை நிறைவேற்றுகின்றது. இலவச ஆரோக்கிய சேவை உள்ள வரைக்கும் நோயினால் பாதிக்கப்பட்டோர் தமக்கென வசதி இல்லாமையினால் சிகிச்சை பெற முடியாது என அவர்கள் அங்கலாகயிருக்கும் நிலை வராது. நாம் எமது நாட்டில் சுகாதாரமான நிலையை மேம்படுத்துவது அத்தியவசியமாகும்.
பயணங்களை மேற்கொள்வதற்காக வேண்டி பொது போக்குவரத்து வசதி முக்கிய இடம் பிடிக்கிறது எமக்கு இலங்கை போக்குவரத்து இருந்தது. இன்று அந்த போக்குவரத்து சேவையானது பலவினப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் துறையுடன் இணைந்து இதனை கட்டியெழுப்பும் தேவை ஏற்பட்டுள்ளது. புகையிரத போக்குவரத்துக்காக வேண்டி புகையிரத பாதைகள் அமைக்கப்படுகின்றன. இந்த அரசாங்கத்தின் அன்று சேதம் அடைந்து இருந்த புகையிரத பாதைகள் இன்று வடக்கிற்கு கட்டுப்பட்டு வருகின்றன. போக்கு வரத்து வசதிகளானது ஒருமைப்பாட்டுக்குரிய பிரதான காரணியாக அமையும் என நம்பப்படுகின்றது.
வேறுபாடுகள் இன்றி அரச நிருவாக சேவைகள் வழங்கப்படல் வேண்டும். தராதரங்களுக்கு ஏற்ப நபர்களுக்கு வழங்கும், வழங்கப்படாத அரச சேவைகளுக்கு பதிலாக அனைவருக்கும் சமமான அரச சேவைகள் வழங்குவது அத்தியவசியமாகும். அதற்கிணங்க எமது சமூகத்தினுள் எமது கலாச்சாரத்தை ஏற்படுத்த வேண்டும். வேறுபாட்டை மையப்படுத்தி அல்ல. தராதரங்களோ வேறுபாடுகளோ இன்றி நாம் அனைவரையும் சமமாக என்னும் நோக்கினை சமூகத்தினுள் ஏற்படுத்துவது மற்றுமொரு ஒப்பந்தமாகும்.
இலங்கையில் சகல இன மக்கள் மற்றும் சமய மத பிரிவினர் தமது பிரிவினரை பார்கிலும் தான் உயர்ந்தவர், மற்றவர்கள் தம்மை பார்கிலும் தாழ்ந்தவர்கள் எனும் எண்ணம் கொண்ட இனவாதிகளாலும், சமயவாதிகளின் எண்ணங்கள் இந்த சமூகத்திலிருக்காது அகற்றுவதற்கு நாம் செயற்பட வேண்டும். ஆங்கில மொழியின் குறைபாடுகளை நீக்குவதற்கு இயலுமையை பெற்றுக்கொடுக்க வேண்டும். இன்று இந்த சமுதாயத்தில் ஆங்கில மொழி பேசக்கூடிய மற்றும் பேச முடியாதாவர்களிடையே பிரதான வேறுபாடுகள் உள்ளதென நாம் அறிவோம். இதனை நீக்க வேண்டும். ஆகவே, ஆங்கில மொழியை சகலருக்கும் பயிற்றுவிக்கும் வசதியினை இந்த அரசானது ஏற்படுத்த வேண்டும்.
நீங்கள் என்னதான் கூறினாலும் இலங்கையின் ஒரு மொழி அறிவு மட்டுமே உள்ள பெருன்பான்மையின சமூகத்தின் மேலாதிக்க மனப்பான்மையில் மாற்றம் ஏற்படாதவரை இன மத ரீதியான கருத்து வேறுபாடுகள் வலுவடையவே செய்யும், இது ஒரு மொழி அறிவுடைய சிறுபான்மையினருக்கும் பொருந்தும்
ReplyDeleteஈமான் இல்லாத எவனையும் நம்பக்கூடாது சிலர் தொட்டிலையும் ஆட்டுகிறார்கள் கிள்ளியும் விடுகிறார்கள். ய அல்லாஹ் இந்த முனாபிக்தனமான சமூகத்தைவிட்டும் முஸ்லிம்களைப் பாதுகாப்பாயாக ஆமீன்.
ReplyDelete