இலங்கையை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள் - உலகநாடுகளுக்கு அறிவுரை
(Un) யுத்த காலங்களின் போது இலங்கை பெற்ற அனுபவங்களை உலகின் எந்தவொரு நாடும் எடுத்துக் காட்டாக பெற்றுக் கொள்ள முடியும் என ஐ.நா இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளுக்கான பொருளாதார மற்றும் சமூக பேரவையின் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
30 வருடகாலமாக பிரிவினைவாத செயற்பாடுகளை எதிர்கொண்ட இலங்கை 2004ஆம் ஆண்டு ஆழிப் பேரலைக்கும் முகம்கொடுத்தது. அதனையடுத்து 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் பல்வேறு அபிவிருத்திகளை கண்டு வருகின்றது. நிலக்கண்ணி வெடிகளை அகற்றல், இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடிமர்த்தல் மற்றும் அவர்களின் வாழ்வாதார மேம்பாடுகளை முன்னெடுத்தல் போன்றவைகளை இலங்கை முனைப்புடன் மேற்கொண்டுள்ளது.
அத்துடன், இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளவும் இலங்கை தரப்பு தயாராகவே உள்ளது. எதிர்வரும் காலங்களில் சுனாமி, ஆழிப் பேரலை போன்ற அனர்த்தங்களின் போது பொதுமக்களை துரிதமாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையகம், சர்வதேச செஞ்சிலுவை சங்க குழு போன்ற அமைப்புகள் இலங்கையில் தமது நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டுள்ளமை மனிதாபிமான செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையே எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது.
இவற்றின் அடிப்படையில் யுத்த சூழலில் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இலங்கை பெற்ற அனுபவங்களை ஏனைய நாடுகளும் எடுத்துக் காட்டாக பெற்றுக் கொள்ள முடியும் என அவர் .தெரிவித்துள்ளார்.

Post a Comment