Header Ads



சப்ரகமுவ மாகாண முஸ்லிம்களின் கவனத்திற்கு..!

(எம்.எம்.ஏ.ஸமட்)

சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்நத தொழில் அற்றவர்களுக்கு தொழில் வழங்க சபரகமுவ மாகாண  அரச சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, சபரகமுவ மாகாண அரச சேவையில் நிலவும் விவசாய போதனா ஆசியரியர், குடியேற்ற உத்தியோகத்தர், கால் நடை அபிவிருத்திப் போதனாசிரியர் சிவில் இயந்திரவியல். மின்சார தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் தொழில்நுட்ப பயிலுனர் உத்தியோகத்தர் ஆகிய பதவி வெற்றிடங்களை போட்டிப் பரீட்சையினூடாக நிரப்புவதற்கு சபரகமுவ மாகாண சபையின் அரச சேவை ஆணைக்கு உரிய தகைமையுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

ஒவ்வொரு குறித்த பதவிக்குமான தகைமையைப் பூர்த்தி செய்திருப்பவர்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள விதி முறைகளுக்கமையத் தயாரிக்கப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை 600 ரூபா காசுக்கட்டளையுடன் ஆகஸ்;ட் மாதம் 23ஆம் திகதிக்கு முன்னர் செயலாளர், சப்ரகமுவ மாகாண  அரச சேவை ஆணைக்குழு, மாகாண சபைக் கட்டிடத்  தொகுதி , புதிய நகரம், இரத்தினபுரி என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டுமென ஆணைக்கு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.