Header Ads



இப்படியும் அதிர்ச்சிகள் வரும்..!

அமெரிக்காவை சேர்ந்த கிரிஸ் ரெனால்ட்ஸ்(56) என்பவர் பழங்கால கார் உதிரி பாகங்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வருகிறார்.  இணையதளம் மூலமாக இந்த தொழிலை செய்ய வசதியாக 'ஆன் லைன் பேங்கிங்' எனப்படும் உடனடி பணப் பறிமாற்ற நிறுவனமான 'பே பால்' நிறுவனத்தில் இவர் கணக்கு தொடங்கியுள்ளார். 

சென்ற மாதத்தின் கணக்கு இறுதி அறிக்கையை பே பால் நிறுவனம் கிரிஸ் ரெனால்டுக்கு அனுப்பி வைத்தது.  இதைக் கண்ட அவருக்கு இன்ப அதிர்ச்சியில் மூச்சே நின்று விடுவது போல் ஆகிவிட்டது. அவரது கணக்கில் கையிருப்பாக 92 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு 5 ஆயிரத்து 520 லட்சம் கோடி ரூபாய்)இருப்பதாக அந்த மாத அறிக்கை குறிப்பிட்டது. 

பே பால் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கணக்கு வைத்திருக்கும் கிரிஸ் ரெனால்ட், 'இதுவரை இந்த கணக்கின் மூலம் மாதமொன்றுக்கு 100 டாலர்களுக்கு மேல் நான் வரவு - செலவு செய்தது கிடையாது.  என் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதாக அறிக்கை வந்ததும், நாம் வங்கிக்கு இவ்வளவு பணம் கட்ட வேண்டுமா? என்று பயந்து விட்டேன். பிறகுதான் என் கணக்கில் இந்த தொகை பற்றாகி இருப்பது தெரிய வந்தது. 

உடனடியாக 'ஆன் லைன்' மூலம் என் கணக்கு விபரத்தை சரிபார்த்த போது எனது கையிருப்பு பூஜ்ஜியம் டாலராக இருந்தது' என்கிறார்.  கம்ப்யூட்டர் குளறுபடியால் இந்த தவறு நேர்ந்து விட்டதாக பே பால் நிறுவனம் அறிவித்துள்ளது. 

உண்மையாகவே இவ்வளவு பெரிய தொகை உங்களுக்கு கிடைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? என்று அவரிடம் கேட்டபோது, 'நான் சமூக பொறுப்பு மிகுந்த குடிமகன். முதலில் அமெரிக்காவின் எல்லா கடனையும் அடைத்துவிட ஏற்பாடு செய்வேன்' என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார்.

No comments

Powered by Blogger.