மாணவிகள் பிள்ளை பெறுவதற்கு விடுமுறை
மாணவிகளுக்கு பேறுகால விடுப்பு அளித்துள்ளது கோழிக்கோடுவில் உள்ள காலிக்கட் பல்கலைக்கழகம். இந்தியாவிலேயே, மாணவிகளுக்கு பேறுகால விடுப்பு அறிவித்துள்ள ஒரே பல்கலைக்கழகம் காலிகட் பல்கலைக்கழகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சில மாணவிகள், பல்கலைக்கழகத்தில் பயிலும் போதே திருமணம் முடிந்து குழந்தைப் பேறு அடைகின்றனர். ஆனால், அவர்களுக்கு நீண்ட நாள் விடுமுறை கிடைக்காததால், அவர்களது படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே, மாணவிகளின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு பேறுகால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு மாணவி தனது குழந்தைப் பேற்றை முடித்துக் கொண்டு ஆண்டு இறுதித் தேர்வை எழுத வழி ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment