'தன்னைத் தூற்றுவோருக்கும் போற்றுவோருக்கும் சமமாகச் சேவைபுரியும் ஒருவரே ஜனாதிபதி மகிந்த'
(JM.Hafeez)
தன்னைத் தூற்று வோருக்கும் போற்று வோருக்கும் சமமாகச் சேவைபுரியும் ஒருவரே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என்று உயத் கல்வி அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்கா தெரிவித்தார்.
6-7-2013 கம்பளையில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இவ் அரசு மேற்கொண்டுள்ள அபிவிருத்தித்திட்டங்களில் மேலே நடந்துகொண்டு ஜனாதிபதியைத் தூற்று வோரும் உண்டு. ஆனால் தூற்றுவோருக்கும் போற்றுவோருக்கும் அவர் சேவை சமமாகவே உள்ளது.
பிரதமர் டி.எம். ஜயரத்ன 62 வருடங்களாக ஸ்ரீல. சு.க. யின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். இதன் காரணமாகவே பிரதமர் பதவி வரை அவர்உயர்த்தப்பட்டார்.
எனவே அவரது புத்திரர் அனுராதா ஜயரத்ன அவர்கள் மத்திய மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று தந்தை வழியில் சேவை புரிவார் என்றார்.

Post a Comment