'13ஆவது திருத்தச் சட்டமும், முஸ்லிம் பரிமாணமும்'
நீதிக்கும் சமாதானத்துக்குமான முன்னனி (FJP) எதிர்வரும் 2013 ஜூலை 17ம் திகதி கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் '13ஆவது திருத்தச் சட்டமும், முஸ்லிம் பரிமாணமும்' என்ற தலைப்பில் கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இதில் தேசியக் கட்சிகளினதும் சிறுபான்மைக் கட்சிகளினதும் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தத்தமது கட்சிகளின் 13ஆவது திருத்தம் தொடர்பான நிலைப்பாடுகளை முன்வைக்கவுள்ளனர்.
அத்துடன் முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள், சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள்இ சமூகத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இங்கு முன்வைக்கப்படும் பல்வேறு கருத்துக்களையும், நிலைப்பாடுகளையும் வைத்து முஸ்லிம் சமூகத்தின் சமூகப் பொருளாதார அரசியலில் 13ஆவது திருத்தத்தின் தாக்கம் பற்றிய அறிக்கையொன்றை தயாரிப்பதே இச்செயலமர்வின் நோக்கம்.

Post a Comment