அம்பாறை மாவட்ட ஜும்ஆப் பேருரைகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்கள்..!
(எம்.எம்.ஏ.ஸமட்)
அம்பாறை மாவட்டத்திலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல்களில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்புக்களில ஜும்ஆப் பேருரைகள் இடம்பெற அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் அம்பாறை மவாட்டக் கிளை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் தெரிவிப்பதாவது,
ஜும்ஆ பேருரைகள் காலத்தின் தேவையறிந்து, மக்கள் பாவங்களலிருந்து விளகி நடக்கவும் நன்மையின் பால் மக்களைத் தூண்டுவதாகவும் அமைய வேண்டும். அம்பாறை மவாட்டத்தின் பல பிரதேசங்களிலும் பல்வேறு குற்றச் செயல்கள் நாளாந்தம் நடைபெறுகிறது. போதைப் பொருள் பானை, போதைப்பொருள் விற்பளை, வட்டியுடன் தொடர்பான கொடுக்கல் வாங்கலகள்;, மோசடி வியாபாரம், விபச்சாரம், ஆள்மாறாட்டம் என வல்ல அல்லாஹ் ஹரமாக்கிய பல்வேறு குற்றச் செயல்கள்; தொடராக நடைபெறுகின்றன. சில குற்றச் செயல்கள் பகிரங்கப்படுத்தப்படுகின்ற அதேவேளை இஸ்லாம் வெறுக்கத்தக்க பல விடயங்கள் பரம இரகசியமாக இடம்பெற்று வருகின்றன.
இவை தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவதற்கான சிறந்ததொரு ஊடகமே ஜும்ஆ பள்ளிவாசல்களின் 'மிம்பர்'கள் ஆகும். ஓவ்வொரு வாரமும் அந்ததந் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற அநியாயங்கள் தொடர்பாகும் நாட்டில் இடம்பெறுகின்ற நடப்பு விவகாரங்கள் தொடர்பாகவும் இந்த ஜும்ஆ பேருரைகள் அமையப் பெறுவது அவசியமாகும்.
ஒரு சில ஜும்ஆ பேருரைகள் தூக்கம் வராதவர்களைக் கூட தூங்கச் செய்வதாக அமைகின்றன. ஆண்மீக் ரீதியாக மக்களை விழிப்படையச் செய்யும் பொறுப்பு உலமாக்களைச் சார்ந்தது. சமுதாயம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கம் ஆபத்துக்கள் தொடர்பில் வாராந்தம் மக்கள் விழிப்பூட்டப்படுவது அவசியம். அந்த வகையில் திட்டமிடப்பட்ட ஒழங்குமுறையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்புக்களில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல ஜும்ஆ பள்ளவாசல்களிலும் ஜும்ஆ பேருரைகள் நிகழ்த்தப்பட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் அம்பாறை மவாட்டக் கிளை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெ பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Thats good idea but our village moulavies are not allowed because they are lost 600 rupees and they feel lost theirs name
ReplyDeleteஒரு சில குத்பாப்பேருரைகள் தூக்கம் வராதவர்களையும் தூங்கச்செய்வதாக அமைகின்றன: அப்படியென்றால் மஸ்ஜிதுக்குச்செல்பவர்கள் இசை நிகழ்ச்சி பார்கச் போகும் மனோ நிலையில் செல்கின்றனரா அஙு கூறப்படுவதெல்லாம் இஸ்லாத்தின்- நபிமார்களின் அனந்தரச்சொத்துக்களான ,,இல்ம் ,,என்ற அறிவு -இஸ்லாத்தின் நெறிகள்,அதைச்சொல்பவரின் பாணி வித்தியாசப்படலாம்,அல்லது வேறு படலாம்,அல்லது குத்பா நிகழ்த்துகின்றவர் அடுக்கு மொழியில் அடுக்க முடியாத வராக இருக்கலாம் அதற்காக இஸ்லத்தின் அறிவுக்கருவூலங்களை -நபியவர்களின் மிம்பர் மேடையை-எள்ளி நகையாடக்கூடாது.யார் குத்பா உரை செய்தாலும் அவர் பைபிளயோ அல்ல்து பகவத் கீதயையோ மகா வம்சதையோ கூற வில்லை >மாறாக குர் ஆனையும் ஹததையும்தான் கூறுகிறார்’ஆகவே அவைகளை ஆசை ஆர்வத்தோடு விருப்பத்தோடு தேட்டத்தோடு செவி மடுக்க வேண்டியது ஒவ்வ்பொரு முஸ்லிமிம் மீதான கடமையாகும்.குர் ஆன் ஓதப்ப்ட்டால் நீங்கள் காது தாழ்த்திகேழுங்கள்,நீங்கள் அருள் செய்யப்ப்டப்போதுமானவர்கள்.(அல் அஃறாப் இறுதிப்பகுதி)இன்று மார்க்க உபன்னியாசங்கள் இசைக்கச்சேரி மேடைகளைபோல் மாறி விட்டதினால்,பயான்களெல்லாம் வியாபரங்களாகி ,குளொபல் பயான்களாக இறுவட்டுக்களாக இன்று சந்தைக்கு வந்து விட்டதினால்,பயான்கள் மூலம் மார்க்க அறிவுகள் பெறும் தன்மை இழக்கபாட்டு விட்டது.இன்னார் இன்று தனது பாயானில் என்னசொன்னார் என்ரு கேட்டால் அல்லது அதன் அடைவு என்ன்வென்று கேட்டால் விடை பூச்சியமே.
ReplyDeleteமற்றைய நேரங்களில் சாதாரணமாகப் பேசும் சில மௌலவிமார்கள் மிம்பர்களில் ஏறிவிட்டால் ஒரு ராகம் கலந்த தொனியில் தான் நோட் புக் இல் எழுதி வந்ததை அப்படியே வாசித்துவிட்டு செல்கிறார்கள்.கேட்டுக்கொண்டிருப்பவர்கள் சில நிமிடங்களில் தூங்கிவிடுகின்றனர்
ReplyDelete