Header Ads



மஹியங்கனை முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்து உத்தரவாதம்..!

மஹியங்கனை மற்றும் அதனையண்டி வாழும் பிரதேச முஸ்லிம்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் கவுன்சிலுக்கு பாதுகாப்பு தரப்பினர் உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.

குறித்த பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் அச்சுறுத்தபப்டுவதாகவும், இதனால் அவர்கள் பீதியடைந்துள்ளதாகவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து முஸ்லிம் கவுன்சில் இதுகுறித்து பாதுகாப்புத் தரப்பனரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தது.

இந்நிலையில் மஹியங்களை மற்றும் அதனை அண்டிய பிரதேச முஸ்லிம் முக்கியஸ்தர்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும், குறித்த பிரதேசங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் பாதுகாப்பு தரப்பினர் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இதனால் முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் பாதுகாப்புத் தரப்பனர் குறிப்பிட்டுள்ளனர். 

இதனை முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.

4 comments:

  1. As usual another promise. What we need now is to take necessary steps by the government to stop the racism against Muslims. They don't take any action against those people who do all the misdeeds against Muslims. So far how many incidents, even in front of security people? So what is going on in this country?

    ReplyDelete
  2. முஸ்லீம்களை பாதுகாப்பதாக எவராலும் உத்தரவாதம் கொடுக்க முடியாது.
    என் இறைவனைதவிர . முஸ்லீம்கள் முஸ்லிம்களாக வாள்ந்தால் 100% உத்தரவாதம் அல்லாஹ் வளங்குவான். இதெல்லாம் விட்டுட்டு ஈமான் இல்லாம யாரும் பேசவேண்டாம்.

    ReplyDelete
  3. முஸ்லிம்கள் பாதுகாப்புடன் மட்டும் வாழ்ந்தால் போதாது. அவர்கள் படைத்த இறைவனை வணங்கும் உரிமையையும் அரசாங்கம் வழங்க வேண்டும்.

    'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே' என்பது முதுமொழியாம்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  4. MUSLIMGAL AWHAGALIN 5 WELAI THOLUGAI NHADATHA ANTHA PALLIYAI THIRANTHU KODUKKA EHERPHADU SEYYAHUM MUSLIGALUKKU EANGALUDAYA RHAPPU ALLAHA KHAPPATHUWAN PHATHUGAPPAN

    ReplyDelete

Powered by Blogger.