Header Ads



காத்தான்குடி ஜம்மியதுல் உலமாவின் கண்டிப்பான உத்தரவு


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

றமழான் மாத பகல் வேளைகளில்    அஸர்த் தொழுகை வரை ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகளினது முன்பகுதியை திரையிட்டு மறைத்தல் அவசியம்- காத்தான்குடி ஜம்மியதுல் உலமா அறிவிப்பு விடுத்துள்ளது.

காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த கிராமங்களில் வாழும் சகோதர, சகோதரிகளுக்கு புனித றமழான் கால நடவடிக்கைகள் தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளிலுமுள்ள பள்ளிவாயல்கள் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபை செயலாளர்  எம்.எச்;.ஜிப்ரி(மதனி) கையொப்பமிட்டு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

கண்ணியமும், புண்ணியமும் நிறைந்த றமழான் மாதம் எம்மை வந்தடைந்துள்ளது. இச்சந்தர்ப்பம் அல்லாஹூதாஆலா எமக்கு வழங்கியுள்ள அருமையான பாக்கியமாகும். அல்லாஹூதாஆலாவின் அருளையும் பாவமன்னிப்பையும் நரக விடுதலையையும் பெற்றுத்தரும்.

இம்மாதத்தை கண்ணியமாகக் கழிக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும். இவ்வகையில் முன்சென்ற காலங்களில் முஸ்லீம்களும், முஸ்லீம் அல்லாதவரும் இம்மாதத்தின் மகிமையைப் புனிதமாக பேணி நடந்துள்ளனர். அவை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்பதற்காக, கீழ்வரும் இஸ்லாமிய ஒழுக்க நெறிமுறைகளை நன்கு பேணி நடந்துகொள்ளுமாறு பொதுமக்களை காத்தான்குடி ஜம்மியதுல் உலமா கேட்டுக்கொள்கின்றது.

முஸ்லீம்களாகிய நாம் அனைவரும் தவறாது நோன்பை நோற்றல்,ஐவேளைத் தொழுகையையும் ஒழுங்காகப்பேணி நிறைவேற்றல்,றமழான் மாத கண்ணியத்தை உணர்ந்து, உலக விவகாரங்களில் அதிக கவனம்  செலுத்துவதைத் தவிர்த்து அல்குர்ஆன்  ஓதுதல்,  மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வணக்க வழிபாடுகளில் அதிகம் ஈடுபடல்,சென்ற வருடங்களைப்போன்று றமழான் மாத பகல் வேளைகளில்    அஸர்த் தொழுகை வரை ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகளினது முன்பகுதியை திரையிட்டு மறைத்தல்,இளைஞர்கள் கூடி நின்று அமைதிக்கு பங்கம் விளைவிப்பதும் குறிப்பாக பெண்கள் தொழுகைக்காக கூடும் இடங்களில் கூட்டமாக நிற்பதும் தவிர்க்கப்படல் வேண்டும்,றமழானின் கண்ணியத்தை உணர்ந்து பொது இடங்களில் உண்ணுதல், பருகுதல், புகைத்தல், பாடல்களை ஒலிபரப்புதல் மற்றும் வீணான பொழுது போக்குகளில் ஈடுபடுதல் போன்றவற்றை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்,றமழான் காலங்களில் மட்டுமல்ல எல்லாக்காலங்களிலும் ஹோட்டல்கள் சிற்றூண்டிச்சாலைகள் யாவும் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12.00 மணி தொடக்கம் ஜூம்ஆத்தொழுகை முடியும் வரை முழுமையாக மூடப்படுவதுடன் சகலரும் ஜூம்ஆத்தொழுகைக்காக சமூகமளித்தல் வேண்டும்,இரவு வேளைகளில் வியாபார ஸ்தாபனங்களை நேர காலத்தோடு மூடி இரவு வணக்க வழிபாடுகளில் ஈடுபடல்.

உள்ளிட்ட நடைமுறை ஒழுங்குகளை செவிசாய்த்தும் அவற்றை மிக சிறப்பாக பேணி நடந்தும் அல்லாஹ்வின் நல்லருளை பெற்றுக்கொள்ளுமாறு சகலரையும் கேட்டுக் கொள்கின்றது.

1 comment:

  1. salam. kadaihalai munnal thirai ittu maraithaal pin dooraal vangalamo. this not KSA. this SL

    ReplyDelete

Powered by Blogger.