அட்டாளைச்சேனை மத்திய கல்லுரியில் நவீன தொழில்நுட்ப கற்கை நெறிகள்
(எம்.பைசல் இஸ்மாயில்)
க.பொ.த.உயர்தர வகுப்புகளுக்கென இவ்வாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள நவீன தொழில்நுட்ப கற்கை நெறிகள் 15-07-2013 அட்டாளைச்சேனை மத்திய கல்லுரியில் (தேசிய பாடசாலை) சம்பிரதாயபுர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் 4 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் பொத்துவில் தொகுதியில் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி இப்பாட நெறியினை தொடர்வதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் கல்லூரி அதிபர் மௌலவி வீ. ரீ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

Post a Comment