ஓட்டமாவடி 01 எஸ்.எம்.ரீ. ஹாஜியார் வீதியை முறையாக அமைப்பார்களா..?
(நஷ்ஹத் அனா)
ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் ஓட்டமாவடி - 01 எஸ்.எம்.ரீ. ஹாஜியார் வீதி ஜெயிக்கா திட்டத்தில் கொங்ரிட் வீதியாக போடப்பட்ட வீதி முறையாக அமையவில்லையென அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வீதியின் நடுவால் அமைக்கப்பட்ட வடிகானுக்காக போடப்பட்ட மூடி முறையாக போடப்படாததால் வாகணங்கள் போகும் போது சத்தமாக இருப்பதாகவும் சில இடங்களில் மூடி போடப்படாமல் உள்ளதால் இரவில் இவ் வீதியால் பிரயாணம் செய்வோர் மிகவும் சிறமப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
18.11.2011ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவ் வீதியின்; வேலைகள் இன்னும் பூரணத்துவப் படுத்தப்படாமல் உள்ளதாகவும் வீதியின் இரு மருங்கிலும் கிரவல் இடுவதற்காக கொட்டப்பட்ட கிரவல் முறையாக பரவப்படாமல் பொதுமக்கலாள் பரவப்பட்டுள்ளதுடன் வீதியில் அங்காங்கே கிரவல் கிடப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இவ் வீதி ஆரம்ப வேலைகள் தொடர்பாக வைக்கப்பட்ட கல்வெட்டு ஹிஜ்ரா வித்தியாலயம் 2ம் குறுக்கு வீதியெனவும் பிரதேச சபையால் தமிழில் எஸ்.எம்.டீ ஹாஜியார் விதி எனவும் ஆங்கிலத்தில் ளுஆவு ர்யதலையச ஏநநவால எனவும் பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளது.
இவ் வீதி கொங்ரீட் வீதியாக அமைக்கப்படுவதில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக அப் பகுதி மக்கள் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், ஜெயிக்கா திட்ட காரியாலயம், மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை காரியாலயம், ஓட்டமாவடி பிரதேச செயலாயளர், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஆகியோருக்கு 27.05.2012ம் திகதி எழுத்து மூலம் அறிவித்தும் எந்தப்பலனும் இல்லையெனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


Post a Comment