கிண்ணியாவில் ஒருவர் தற்கொலை
(vi) கிண்ணியா பைசல் நகரில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் மதீனா நகரைச் சேர்ந்த முஹமத் நியாஸ், (வயது 32) என பொலிஸார் தெரிவித்தனர்.
கடன் தொல்லை மற்றும் தான் விரும்பிய பெண்ணை மணக்க முடியாமை போன்றன காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தான் முன்னர் திருமணம் முடித்து பிரிந்த பின் வேறு ஒரு பெண்ணை திருமணம் முடிக்க முற்பட்ட வேளையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவும் மனவுளைச்சலுக்கு ஆளான நிலையிலுமே அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் உறுப்பினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
Post a Comment