Header Ads



எகிப்தில் முர்ஸிக்கு ஆதரவாக இன்றும் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சியின் ஆதரவாளர்கள் மற்றொரு பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் முர்சி ஆதரவாளர்கள் பாதுகாப்பு கட்டடங்களை நோக்கி பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளதோடு, இன்று செவ்வாய்க்கிழமை மில்லியன் மக்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான இஸ்லாமியவாதிகளைக் கொண்ட கூட்டணி நேற்று விடுத்த அறிவிப்பில், வீதிகளுக்கும் சதுக்கங்களுக்கும் சென்று கெளரவத்தையும் சுதந்திரத்தையும் பெற போராடுங்கள்” என எகிப்தியரை கோரியுள்ளது. இரத்தம் தோய்ந்த இராணுவ சதிப்புரட்சியாளர்களின் துப்பாக்கி ரவைக்கு இலக்கான போராளிகளின் உரிமைக்காகப் போராடுங்கள் என அந்த அழைப்பில் குறிப்பிட்டுள்ளது.

3 comments:

  1. 13 கிலோ மீட்டர் பரப்புக் கொண்ட அரபா மைதானத்தில் 3 மில்லியன் மக்கள் தான் ஹஜ்ஜின் போது கூட முடியும்.

    ஆனால்......

    53 ஆயிரம் மீட்டர்கள் பரப்புக் கொண்ட தஹ்ரீர் சதுக்கத்தில்.....முர்ஸியை வீழ்த்துவதற்கு இராணுவத்தரப்பால் ஒன்று திரட்டப்பட்ட மக்கள்..

    30 மில்லியன்.

    இதை நம்மில் சிலரும் நம்புகின்றனர். கூகுல் அறிக்கையின் படி அறியப்பட்ட தகவல் என்று அந்நேரம் பொய்யொன்றை பரப்பினர். ஆனால்..முர்ஸிக்கெதிரான கிளர்ச்சி நடந்த பின்பே கூகுல் கூட தாம் அப்படி ஒரு நம்பமுடியாத தகவலையும் வெளியிடவில்லையென மறுத்தது.

    ReplyDelete
  2. aauathaviyparihalukku inimeal santhosamthaan.muttalhalukku aliwuthaan.

    ReplyDelete
  3. ya Allah Help muslim Brother hood and islamic sareea
    allahumansurilmuslimeen vansuril mujahitheen fee sabeelilah
    Allahum aessal islama wal muslimeen

    ReplyDelete

Powered by Blogger.