Header Ads



மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக எம்.வை.எஸ்.தேசப்பிரிய நியமனம்

(ஏ.எஸ்.எம்.ஜாவித்) 

மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக எம்.வை.எஸ்.தேசப்பிரிய தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

காலி மாவட்டத்தைப் பிறப்பிடமாகாக் கொண்ட இவர் இலங்கை நிருவாக சேவை தரம் ஒன்றைச் சேர்ந்தவர். பல்வேறுபட்ட பதவிகளை வகித்த இவர் இறுதியாக தென்மாகாண சபையின் கல்வி அமைச்சின் செயலாளராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட அரச அதிபராக இருந்த சரத் ரவீந்ர பொது நிருவாக அமைச்சுக்கு இடமாற்றலாகிச் சென்றமையை அடுத்தே தேசப்பிரிய நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.