Header Ads



குட்டி இளவரசர் பிறந்த அன்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் வெள்ளி நாணயம்

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கடந்த 22ம் தேதி லண்டனில் உள்ள புனித மேரி ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

 இங்கிலாந்து அரச வம்சத்தின் புதிய வாரிசை வரவேற்று நாடெங்கிலும் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில் இங்கிலாந்து அரண்மனை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 குட்டி இளவரசன் பிறந்த 22ம் தேதி இங்கிலாந்து நாட்டில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் அரச முத்திரை பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்களை அன்பளிப்பாக வழங்குவதாக பக்கிங்காம் அரண்மனை நேற்று அறிவித்தது.

 இதற்காக 2013 வெள்ளி நாணயங்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. இந்திய மதிப்புக்கு சுமார் ரூ 2 ஆயிரத்து 500 பெருமானமுள்ள இந்த நாணயங்களை பெற விரும்புவோர் தங்களது குழந்தை 22ம் தேதி பிறந்ததற்கான ஆதாரங்களுடன் இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம்.

 அரச முத்திரை பொறிக்கப்பட்ட நீலம் அல்லது இளஞ்சிவப்பு பைகளில் இந்த அதிர்ஷ்ட வெள்ளி நாணயம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.