இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது மிக அபாயகரமானது - ஹமாஸ்
(Tn) இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பது மிக அபாயகரமானது என ஹமாஸ் எச்சரித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை பலஸ்தீனர்கள் ஏற்ற உடன்பாட்டுக்கு முரணானது என காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் பேச்சாளர் சமி அபு சுஹ்ரி கூறியுள்ளார். “பேச்சுவார்த் தையை ஆரம்பிப்பது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கும் அதனது குடியேற்ற நடவடிக்கையை விரிவுபடுத்தவும் மாத்திரமே உதவும்” என சுஹ்ரி கூறினார்.
எனினும் இந்த பேச்சு தோல்வியில் முடியும் என பலஸ்தீன பூர்வாங்க கட்சியின் தலைவர் முஸ்தபா பர்டதி எதிர்வுகூரியுள்ளார். “தற்போதைய இஸ்ரேல் அரசு ஒரு குடியேற்றக்காரர்களின் அரசாகும். அது பலஸ்தீன உரிமையை மற்றும் சுதந்திரத்தை ஒருபோது ஏற்கப்போவதில்லை.
அது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்து தன்னாட்சியை வழங்கப்போவதில்லை” என்று அவர் கூறினார். மற்றொரு பலஸ்தீன அமைப்பான பலஸ்தீன விடுதலைக்கான முன்னணி, இந்த அமைதி முயற்சி பலஸ்தீனத்தின் நலனுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என விமர்சித்துள்ளது. “கடந்த இருபது ஆண்டு இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை வெறும் பூஜ்யத்தில் முடிந்தது. அது இஸ்ரேலின் குடியேற்றங்களை விரிவுபடுத்த மாத்திரமே உதவியது” என்று பலஸ்தீன விடுதலை முன்னணியின் பேச்சாளர் ஜமில் மசர் குறிப்பிட்டார்.
.jpg)
Post a Comment