சட்டவிரோதமாக மாடு அறுத்தவர் கைது
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாமல்வத்த பகுதியில் சட்ட விரோதமாக மாடு அறுத்த நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடம் மாடு அறுப்பதற்கான அனுமதிப்பத்திரம் மற்றும் மிருக வைத்தியர் ,பொது சுகாதார பரிசோதகரின் பரிசோதனை அறிக்கைகள் இல்லாமல் பாழடைந்த வீட்டில் இறைச்சி விற்கப்படுவதாக கூறி கிராம உத்தியோகதரான திஸாநாயக்க என்பவருக்கு தொலைபேசி மூலம் பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை மொறவௌ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார்.
இது விடயமாக பொலிஸ் நிலைய அதிகாரியிடம்; தொலைபேசி மூலம் வினவியதையடுத்து ஒருவரை கிராம உத்தியோகத்தர் ஏழு குற்றச்சாட்டுக்களை வைத்து தன்னிடம் அறிக்கையும் ஒப்படைத்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஆமீன்
ReplyDeleteபாவம் ! இந்த அப்பாவி
ReplyDeleteநமது நாட்டுல நடப்பது எல்லாம் சட்டப்படி தானே...........
அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்பட்ட மாடு சட்டவிரோதச் செயலாம்.
அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்படாததுதான் சட்ட விரோதச்செயல் என்று இந்த கல்லையும் மண்ணையும் தெய்வமாகக் கருதும் சமூகம் எப்பதான் விளங்குவார்களோ..........
نعوذ بالله من الجاهلين
அப்ப நீங்க அடையாள அட்டை , பிறப்பு சான்றிதல் ,திருமணப்பதிவு எதுவும் எடுக்க வேண்டாம் .....
ReplyDelete