முஸ்லிம் சகோதரரிக்கு ஒரே சூலில் கிடைத்த ஐந்து குழந்தைகளில் மூன்று மரணம்
மடவளை முஸ்லிம் பெண்மணிக்குக் ஒரே சூலில் கிடைத்த ஐந்து குழந்தைகளில் மூன்று குழந்தைகள் இதுவரையில் மரணமடைந்துள்ளன.
நேற்று ஒரு பெண்குழந்தையும் ஏற்கனவே ஜூலை 1ம், ஜூலை 9ம் திகதிகளில் முறையே இரு குழந்தைகளும் மரணமடைந்தன.
மடவளை, சிரிமல்வத்தை வீதியில் வசிப்பிடத்தைக் கொண்ட பாத்திமா பர்சிஹா என்ற 31 வயதுயை மேற்படி பெண்மணி கண்டி வைத்தியசாலையில் 4 ஆண்குழந்தையையும் ஒரு பெண்குழந்தையையும் பிறசவித்திருந்தார். தற்போது இரண்டு ஆண் குழந்தைகள் மட்டுமே எஞ்சியுள்ளன.இவை சிலகாலம் குழந்தைப் பேரில்லாமல் இருந்து அவருக்கான தலைப்பிரசவமாகும்.
மரணித்த 3 குழந்தைகளும் சுவாசிப்பதில் அவஸ்தைப்பட்டதகவும் இது காலவரை செயற்கை சுவாசமே வழங்கப்பட்டு வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். அதே நேரம் மற்றைய இரு குழந்தைகளும் தற்போது தேகாரோக்கியத்துடன் காணப்படுவதாக உறவினர்கள் மேலும் தெரிவித்தனர். மடவளை ஜூம்மா பள்ளியில் இச்சிசுக்களின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

Post a Comment