Header Ads



காத்தான்குடியில் காய்த்த பேரீத்தம்பழங்களை சுவைத்த அமைச்சர் டக்ளஸ் (படங்கள்)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான மஹிந்த சிந்தனை கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் வீதிகளை அழகுபடுத்தும் விஷேட திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக மத்திய கிழக்கு நாடுகள் போன்று மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிராதான வீதியின்; நடுவே 61 பேரித்த மரங்கள் நடப்பட்டு காத்தான்குடி நகர சபையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கிழக்கு மாகாணத்தில் நிலவும் அதிக உஷ்னம் காரணமாக பிரதான வீதியின் நடுவே நடப்பட்டுள்ள சில பேரித்த மரங்களில் பேரித்தம் பழங்கள் காய்த்துப் பழமாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகைதந்த பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று செய்வாய்க்கிழமை காத்தான்குடிக்கு வருகைதந்து காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாகவுள்ள  இவ்வருடத்தில் அருவடைக்கு தயாரான பேரித்த மரங்களின் சில பழங்களை தனது கையால் பறித்து சுவைத்தார்.

அத்தோடு வடக்கு மாகாணத்திலும் இதே போன்று பேரித்த மரங்களை நடுவதற்கான ஆலோசனைகளையும் அமைச்சர் டக்ளஸ் பெற்றுக் கொண்டார்.

1 comment:

  1. காத்தான்குடிக்கு வருகை தந்த பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருக்கு இப்பிரதேச மக்களினது பாரம்பரிய கைத்தொழில்களான கைத்தறி நெசவுத் தொழில், பாய் பின்னல், பனையோலையால் பெட்டி தட்டு இழைத்தல் போன்ற பாரம்பரிய கைத்தொழில்களையும், இப்பிரதேசத்திலுள்ள சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் படைப்புக்களையும் காட்டி அவற்றை அபிவிருத்தி செய்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வழியைப் பார்க்காமல் பேரீச்சம்பழத்தைச் சுவைக்கக் கொடுத்து தனது கெட்டித்தனத்தின் படத்தையே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா காட்டியிருக்கிறார்.

    அமைச்சர் டக்ளஸ் பிரதான வீதியை விட்டு கொஞ்சமேனும் ஊருக்குள் நுழைந்திருக்க வேண்டும். பம்மாத்து அபிவிருத்தி பட்டவர்த்தனமாகியிருக்கும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.