Header Ads



பள்ளிவாசல்கள் மீதான தாக்குதலும், முஸ்லிம் ஊர்காவல் படையின் அவசியமும்..!!

(நாகூர் ழரீஃப்)

சென்ற 11 ஆம் தேதி மஹியங்கணை மஸ்ஜிதுல் அறஃபா ஜும்ஆப் பள்ளிவாசல் இனந் தெரியாத ஒரு குழுவினரால் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக கேள்வியுற்று இலங்கை முஸ்லிம் சமூகம் மனவேதனை அடைந்துள்ள வேளையில், எமது அரசியல் தலைவர்கள் அவர்களது வழமையான அறிக்கைகளுடனும் கண்டனங்களுடன் நின்று கொண்டனர்.

எனினும், முஸ்லிம் சமூகம் இவர்களது இத்தகைய நடவடிக்கைகள் மீதும் ஒரு போதும் திருப்தியடையவில்வை என்பது தெளிவான ஒரு விடயமாகும். 

அத்துடன், முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் கடுமையான சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவித்து வருகின்றது என்பது உலக நாடுகளுக்கு அதிக முக்கியத்துவத்துடன் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய ஒரு அமானிதமாகும். இவ்வமானிதத்தை பிற நாடுகளின் தூதுவராலயங்களில் கடமைபுரியும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் செய்ய முன்வரவேண்டும்.

நாட்டில் பள்ளிவாசல்கள் இன்னும் தாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் நிறையக் காணப்படுவதால், அதுபற்றிக் கூடுதல் கவணம் செலுத்துவது பள்ளிவாசல்களின் நிறுவாக சபையினர், உலமாக்கள், ஊர் புத்திஜீவிகள், வாலிபர்கள் மீது கடமையாகும்.

எனவே, அருகாமையில் அமைந்துள்ள பொலிஸ் பிரிவினருடன் கூட்டிணைந்து, அவர்களது ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்று, உடனடியாக ஊர் காவல் படைகளை அமைத்து, மேற்படி காடயர்களின் தாக்குதல்களில் இருந்து அல்லாஹ்வின் மாளிகைளையும் றமழானின் இராவணக்கங்களையும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்வதும் வணக்கமாகும்.

சமூக ஒற்றுமை இல்லாத காரணத்தினால், எதிரிகளின் கைவரிசைகள் நீண்டு செல்கின்றன. சமூக ஒற்றுமையை பலப்படுத்துவதும், அல்லாஹ்வுடனான தொடர்புகளை சீராக்கிக் கொள்வதும் மேற்படி ஊர்காவல் படையையும் பாதுகாக்கும்.

ஒரு கிராமத்துக்கு ஒரு ஊர்காவல் படை போதுமாகும். அதிலும் எனது இயக்கத்தவர்களின் ஊர்கவல் படை, அந்த இயக்கத்தவரின் ஊர் காவல் படை என்று அண்மைக் கால பிறைக் குழுக்களைப் போன்று சிந்திக்கக் கூடாது.

சமூக நோக்கை கொண்டதாக எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதுடன், ஊர் காவல் படைப் பிரிவு பற்றி சிந்திக்க முடியாதா? 

3 comments:

  1. இந்த யோசினை எனக்கு சரியாகப்படவில்லை நமது ஊர்காவல் படை இளைஞ்சன் ஒரு வேளை தவறுதலாகவோ , அல்லது உணர்ச்சிவசப்பட்டோ பள்ளிவாசலை தாக்க வருபவர்களை சுட்டு விட்டால் பிறகு நமது நிலைமை அதோ கெதிதான் எப்படா கலவரத்தை முஸ்லிம்களுக்கு எதிராக தொடங்குவோம் என்று இருக்கும் இனவாதிகளுக்கு பெரும் வாய்ப்பாக போய்விடும்.

    எல்லாவற்றுக்கும் "அல்லாஹ் "ஒருத்தனே போதுமானவன்.

    ReplyDelete
  2. 'மஸ்ஜிதுல் அரபா ஜும்ஆ பள்ளிவாசல்' புனித றமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான, இஸ்லாத்தை அவமானப்படுத்தும் வேதனைக்குள்ளாக்கும் முதலாவது செயற்பாடு இதுவாகும்,பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த செயலானது முஸ்லிம்களை வெகுவாக பாதிப்படையச் செய்துள்ளது.

    ReplyDelete
  3. எந்த மதம் பெரும்பான்மையாக இருக்கின்றதோ, அது சிறுபான்மை மதங்களை ஒடுக்குவது இந்த காலத்தில் அநேகமான நாடுகளில் வழமையாகிவிட்டது. (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்....)

    ReplyDelete

Powered by Blogger.