Header Ads



யாழ்.கிளிநொச்சி முஸ்லிம்களும், வடமாகாண சபைத் தேர்தலும்..!

(மௌலவி ஏ.எம். அப்துல் மாலிக்)

யாழ், கிளிநொச்சி முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக, மீழ் குடியேற்றத்துக்கு பின்னர் காத்திரமான எவ்வித உதவிகளும் கிடைக்காத நிலையில் உள்ளனர். அரசியல் தலைமைகள், சம்மேளனங்கள், சங்கங்கள், புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள், உலமாக்கள் பல்வேறுபட்ட அமைப்புக்கள் இருந்தபோதும் காத்திரமான மீள்குடியேற்றம் இன்றுவரை இடம்பெவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

இக்கால கட்டத்தில் வடமாகாண சபைத் தேர்தலையும் நாம் எதிர்நோக்கியிருக்கும் வேளையில் எவ்வாறான முடிவுகளை யாழ், கிளிநொச்சி முஸ்லிம்கள் எடுக்கவுள்ளார்கள் என்பதனை நிதானமாகவும் தூர நோக்குடனும் சமூகப் பற்றுடனும் வேற்றுமை களைந்து ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைந்தால் எதிர்காலத்தில் அல்லாஹ்வின் உதவியால் வெற்றிகளை அடையலாம். 'ஒற்றுமை எனும் கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள்' (அல்-குர்ஆன்)

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் தேர்தலில் நாம் தெரிவு செய்யப்போகும் வேட்பாளர்கள் அல்லாஹ்வை பயந்தவர்களாகவும் பொதுச்சொத்தில் பேணுதல் உள்ளவர்களாகவும் ஹலால், ஹராம் பேணக்கூடியவர்களாகவும் சுயநலப் போக்கற்றவர்களாகவும் இருப்பவர்களை நாம் தெரிவு செய்யவேண்டும். நாம் ஒன்றிணைந்து கட்சி, கொள்கைளுக்கு அப்பால் சமுகத்தின் விடியலுக்காகவேண்டி ஒன்றிணைவோம்.    

2 comments:

  1. முஸ்லம் காங்கரஸ் கட்சி ஒன்று இல்லை என்றெண்ணிக்கொண்டு
    புதிதாய் மக்களுக்கென்று ஒரு கட்சியை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் நம் சமுதாயத்துக்கு ஏற்ப்பட்டுள்ளது.
    இது அகில இலங்கை முஸ்லிம் மக்களும் எடுக்க வேண்டிய முடிவே.இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் மாத்திரம்
    எதிர் கொள்ளும் பிரச்சினை யல்ல இஸ்லாம் மார்க்கதுக்கும்
    கூட முன் வந்து பேசாத மந்த மநதிரிமாரே நம் முஸ்லிம் மந்தரிமார்கள்.

    ReplyDelete
  2. மஹ்தி அலைஹிஸ்ஸலாம் தான் உங்களின் எதிர்பார்ப்பின்படி வேட்பாளராக வரவேண்டும்!

    துஆச் செய்வோம்!!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.