Header Ads



நாச்சியாதீவில் வீண் விரயமாகும் மக்களின் பணம்

(நாச்சியாதீவு பர்வீன் )

நாச்சியாதீவு பொது விளையாட்டு மைதானத்தில் வொழி ball Court அமைப்பதற்க்கு   இளைஞர் விவகார அமைச்சினால் சுமார் 12 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது , வடமத்திய மாகாண  பாராளமன்ற உறுப்பினர் திரு துமிந்த திசாநாயக அவர்கள் இளைஞர் விவகார பிரதி அமைச்சராக இருந்த போது இந்தப் பணம் பிரதேச காரியாலயத்தின் மூலமாக அங்கீகரிக்கப்பட்ட பதியப்பட்ட இளைஞர் கழகத்தினால் நாச்சியாதீவு பொது விளையாட்டு மைதானத்தில் வொழி ball Court அமைப்பதற்க்கு ஒதுக்கப்பட்ட பணத்தின் மூலம் பதியப்பட்ட இளைஞர் கழகத்தின் கண்களில் மண்ணை 
தூவி விட்டு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இந்தப்பணத்தை பெற்று வொழி ball court ஐ அமைத்து விட்டார் அவர் விரும்பியவாறு அமைக்கப்பட்டவொழி ball court பொது மக்களின் எந்த வித ஆலோசனையையோ அல்லது இளைஞர் கழகத்தின் ஆலோசனையோ கேட்காமல் நிறுவப்பட்டதாகும்.

இப்போது மைதானத்தில் எவ்வித விளையாட்டுக்களையும் சரியாக விளையாட முடியாத அளவுக்கு இந்த வொழி ball court அமைந்துள்ளதை இளைஞர் கழகத்தினர் வன்மையாக கண்டிக்கின்றனர், இது மக்கள் பணத்தை சூறையாட பிரதேச சபை உறுப்பினர் செய்கின்ற கொந்தராத்து வேலையே தவிர அபிவிருத்தி வேலை அல்ல என்று ஊர் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் அரசாங்கம் அபிவிருத்திக்காக செலவிடும் பணத்தை வீண் விரயம் செய்யும் இவ்வாறன அரசியல் வாதிகளினால் அரசுக்கு கெட்ட பெயரே எஞ்சியுள்ளது.

இந்த விடயத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்க்கு கொண்டு வந்து நியாயம் கேட்க மக்கள் விழிப்புணர்வுக் குழு முடிவு செய்துள்ளது -இவரால் அமைக்கப்பட்ட 12 இலட்சம் பெறுமதியான வொழி ball court இன் தற்போதைய நிலைதான் படத்தில் காண்பது இதில் இப்போது ஆடுகள் மேய்க்கப்படுகின்றன.


No comments

Powered by Blogger.