Header Ads



அரசுக்கு எதிராக முஸ்லிம்கள் வீதிகளில் இறங்குவதை தடுக்க முடியாமல் போகும்

(தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் - அஸாத் சாலி)

இந்தப் புனித றமழான் மாதத்தில் முஸ்லிம்களுடைய அமைதியைக் குலைக்கும் மற்றொரு நிகழ்வு இன்று அதிகாலை கொழும்பு தெமட்டகொடைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பேஸ்லைன் நெடுஞ்சாலையில் கொழும்பு மாநகர சபையின் அனுமதியுடன் செயற்பட்டு வரும் கால்நடைகளை அறுக்கும் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நியாஸ் என்ற முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான லொறி காவி உடை அணிந்து வந்த காடையர்கள் சிலரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கால்நடை அறுப்பு நிலையத்தில் சட்டபூர்வமாக அறுக்கப்படும் இறைச்சிகளை ஏற்றிச் செல்லும் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் லொறியே இவ்வாறு எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் சிவப்பு நிற டபிள் கெப் வாகனமொன்றில் இங்கு வந்த காவி உடையணிந்த காடையர்கள் குழு அருகில் உள்ள கடையில் தேநீரும் அருந்திவிட்டு நீண்ட நேரம் காத்திருந்து இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர். சம்பவம் நடந்த போது இன்னும் பல லொறிகள் அறுக்கப்பட்ட இறைச்சிகளை ஏற்றிக் கொண்டு வெளியேற தயார் நிலையில் இங்கு இருந்துள்ளன.

இந்த இடத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தடவை அதிகாலை வேளையில் காவி உடையினர் தலைமையில் வந்த பெரும் காடையர் குழு இங்கு கலவரங்களில் ஈடுபட்டது. அப்போது அவர்கள் இந்த இடம், இங்கு நடைபெறுகின்ற கால்நடை அறுப்புக்கள் என்பன பற்றி கூறிய எல்லா குற்றச்சாட்டுக்களும் பொய் என நிரூபிக்கப்பட்டது. அவமானத்தோடு அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இப்போது ஒரு சிறு குழுவாக வந்து தமது காடைத்தனத்தை காட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த முதலாவது சம்பவத்தின் பின் இங்கு அதிகாலை வேளையில் வரும் லொறிகள் அனைத்துக்கும் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என கொழும்பு மாநகர மேயர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அந்தப் பொறுப்பை இந்த நிலையத்துக்குப் பொறுப்பான மாநகர சபையின் பிரதம கால்நடை வைத்தியர் டொக்டர்.தர்மவர்தன ஏற்றிருந்தார். இன்று அது மீறப்பட்டுள்ளது. டொக்டர் தர்மவர்தன ஒரு சிங்கள கடும்போக்கு இயக்கத்தில் முக்கிய பதவி வகித்தவர் என்பதும் எமது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறான ஒருவரால் எப்படி இந்த நிலையத்தில் பாரபட்சமற்ற முறையில் சேவையாற்ற முடியும்?

இந்த சம்பவம் நடந்திருப்பது பேஸ்லைன் பிரதான நெடுஞ்சாலையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சற்று தொலைவில். இதில் சம்பந்தப்பட்டவர்கள் பயணம் செய்த வாகனம் சிறைச்சாலையைக் கடந்து தான் சென்றிருக்கின்றது. வேறு வழியில்லை. எனவே அது சிறைச்சாலை பாதுகாப்புக் கெமராக்களில் நிச்சயம் பதிவாகியிருக்கும் என்று நம்புகின்றேன். எனவே அந்த வாகனத்தையும் அதில் பயணம் செய்தவர்களையும் கண்டு பிடிப்பது கஷ்டமான காரியமல்ல. பாரபட்சமற்ற முறையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டால் நிச்சயம் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கலாம். பொலிஸார் இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஏற்கனவே ஒரு தடவை குறிப்பிட்டது போல் மாட்டிறைச்சி அல்லது ஆட்டிறைச்சி வர்த்தகத்தில் ஈடுபடுகின்றவர்கள் முழுக்க முழுக்க முஸ்லிம்கள். இந்த வர்த்தகத்தில் தங்களது சமூகத்தவர்களால் பங்கேற்க முடியாமல் இருக்கின்றதே என்ற ஆதங்கம் தான் மாடுகளை அறுப்பதற்கு எதிராகக் குரல் கொடுக்க முக்கிய காரணம். மாறாக விலங்குகள்; மீது இவர்களுக்குள்ள கருணை அல்ல இதற்கு காரணம். அப்படியானால் பன்றியும் ஒரு உயிரினம் தானே அதை மட்டும் அறுத்து பள்ளிக்குள் கொண்டு வந்து வீசலாம் ஆனால் மற்ற சமூகம் தனக்கு அனுமதிக்கப்பட்ட உணவுத் தேவைக்காக ஆடுகளையும் மாடுகளையும் அறுக்கக் கூடாது என்று கூறுவதில் என்ன நியாயம் உள்ளது.

தெமட்டகொடையில் இருக்கின்ற மாடுகள் அறுக்கும் நிலையத்தை குறிவைத்து காய் நகர்த்தும் வேலைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவே சந்தேகிக்கத் தோன்றுகின்றது. இதற்கு காரணம் அது அமைந்துள்ள காணியின் பெறுமதி. இந்த அரசின் அமைச்சர்களையும் உயர் மட்ட அதிகாரிகளையும் பீடித்துள்ள பிரதானமான நோய் காணிகளை சுற்றி வளைத்து கைக்குள் போடுவதாகும். அந்த வகையில் இந்தக் காணியையும் சுற்றி வளைக்கும் எண்ணம் யாருக்கோ வந்துள்ளது. அதுதான் ஆரம்ப கட்டமாக காவி உடை தரித்த காடையர்கள் ஏவி விடப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல வெளிநாட்டுக் கம்பனியொன்றின் மூலம் இறைச்சியை இறக்குமதி செய்வதற்கான சில முயற்சிகளும் இடம்பெற்று பயணம் செய்தவர்களையும் கண்டு பிடிப்பது கஷ்டமான காரியமல்ல. பாரபட்சமற்ற முறையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டால் நிச்சயம் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கலாம். பொலிஸார் இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

உள்நாட்டில் இறைச்சிக்காக கால்நடைகளை அறுப்பதை தடுத்து நிறுத்தி வெளிநாட்டிலிருந்து இறைச்சியை இறக்குமதி செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட கம்பனியிலிருந்து பெருமளவு பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு இரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த காவி உடை காடையர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

இந்த றமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கடைசி நடவடிக்கையாகவும், இந்த ஆட்சியின் கீழ் முஸ்லிம்களுக்கு எதிரான கடைசி நடவடிக்கையாகவும் இது இருக்கட்டும். இல்லையேல் முஸ்லிம்களை நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராடுமாறு அழைப்பு விடுக்கப்படும். மகிந்த ராஜபக்ஷ அரசின் கீழ் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இன்னல்களுக்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். முஸ்லிம்கள் இப்போது பொறுமையின் எல்லைக்கு வந்துள்ளனர். அரசாங்கத்தின் ஆதரவோடு செயற்படும் அடிப்படைவாத, இனவாத, காடையர் கும்பல்களை அதன் அனுசரணையாளர்கள் கட்டுப்படுத்தாவிட்டால் முஸ்லிம்களும் அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்குவதை தடுக்க முடியாமல் போய்விடும். இலங்கையில் எந்த மூலையிலாவது முஸ்லிம்களுக்கு எதிரான இன்னொரு சம்பவம் நடந்தால் முஸ்லிம்களை வீதிகளில் இறங்குமாறு நானே அழைப்பு விடுப்பதோடு அந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கவும் நான் தயாராக உள்ளேன்.

15 comments:

  1. allahu akber we are ready insha allah

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் கோழைகள் அல்ல. வீரர்களிளே சிரந்த வீரன் பொறுமையாளன்தான் அதைத்தான் நாம் செய்து கொண்டு வருகிறோம். இனியும் சீன்டிப்பார்க்க வேண்டாம்.

    ReplyDelete
  3. Insha allah ennaeramum naan thayaaraaga ullaen.. muslimgalin urimaikkaaga uyirai vidavum thayaar

    ReplyDelete
  4. We have to be patient for the time being as we observe the fasting...

    ReplyDelete
  5. இலங்கை வால் முச்லீம்களுக்காக பேசக்கூடிய ஒரெ ஒருவர் என்றால் இந்த அசாத் சாலி மட்டும் தான்...! இவரயும் கேவலப்படுத்தி சேரு பூசும் எம் முச்லிம் படு துரோகிகலும் இருக்கத்தான் செய்கின்றனர்.

    யாஅல்லாஹ்.. எம் உம்ம்த்திற்காக பாடு படும் இவரின் அனைத்து முயட்சிகலயும் ஏற்றுக்கொல்வாயாக..!!!

    ReplyDelete
  6. இவற்றையெல்லாம் தட்டிக்கேட்கவோ இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவோ முஸ்லிம் வாக்குகளால் சுகபோகங்கள் அனுபவிக்கும் கேடுகெட்ட முனாபிக் அரசியல்.........ளே உங்களால் முடியாமல் போனதற்கு அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலேயே கொடிய தண்டனை வழங்கவேண்டும் என்று எனது ஒவ்வொரு துஆக்கலிலும் வேண்டுகிறேன். வெறும் அற்ப சுகங்களுக்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் விற்று நக்கு தின்னும் உங்களுக்கு இனிமேலும் வாக்களிப்பவன் உங்களிலும் கேடுகெட்டவன்...

    ஹிஸ்புல்லா நீ கடிதம் எழுதி கிழிச்சது போதும், முடியவில்லை என்றால் சகலதையும் பொத்திக்கிட்டு நீ சுகமாய் இரி..
    ஹகீம் நீங்க தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டது போதும் சும்மா பில் கூடி அதற்கும் எங்களது பணத்திலே சரி செய்யவேண்டாம்.
    இதைவிட புறாவில் தூது விடலாமே,

    கேவலம் கெட்டவர்களே இறைவன் உங்களுக்கு ரோசம் மானம் சூடு சொரணை எதையும் தரவில்லையா...?

    ReplyDelete
  7. yes our tolerance limit has exceeded, if government do not know what is happening to muslims in the country we should let them know by protesting on the street. We still hope government will not allow such act to be continued in the country for the sake of country reputation.

    ReplyDelete
  8. Allahu Akbar! Allahu Akbar!Allahu Akbar! This type of atrocities are possible when law enforcing authority is sleeping in Srilanka. These shameful acts by Buddhist brothers in Mahiyangana and by Bikkus in Dematagoda show nothing but to provoke Muslims apart from what they did before the commencement of Ramazan elsewhere in the country for Mosques and holly shrines. Before we talk about the action by Muslim brothers we need to know what the President and the Deference secretary are doing about what is committed by these organised thugs.We need to see whether the government will take action against them or not. Then we would be reminded of the present Al Nazar City in Egypt.

    ReplyDelete
  9. இவ்வாறான தான்தோன்றித்தனமான போராட்ட அழைப்பை விடுத்தால் முதலில் கிழக்கு மக்கள் மாத்திரம் முண்டி அடித்துக்கொண்டு வருவார்களாக்கும். இலங்கையில் வேறு எந்த ஒரு முஸ்லிம் மகனும் உங்க அழைப்புக்கு வராது என்பதை இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.

    இவ்வாறான ஒரு முன்டியடித்தல் செயற்பாட்டைத்தான் இந்த காவியுடையும் எதிர்பார்த்து நிற்கின்றது. அதற்கு தூர நோக்கு சிந்தனை அற்ற, உணர்ச்சி மட்டும் பேசும் நீங்கள் ஊற்றும் எண்ணையும் அந்த காவியுடைக்கு சாதகமாக அமைந்துவிடக்கரனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    வெளிநாட்டு இறைச்சி இறக்குமதி என்று வந்தால், அதி முதல் கோட்டா நம்ம மாண்புமிகு அமைச்சர் பௌசிக்காகத்தான் இருக்கும்.

    ஆக, நீங்கள் இழந்த அரசியல் ஆசனத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள இன்றைய சூழ்நிலைதான் உங்களுக்கு சம கர்சிதமான ஆயுதம் என்று நீங்கள் தேர்வு செய்துள்ளீர்கள் என்பதுதான் உண்மை.

    ReplyDelete
  10. I 75% agree with SLAHY's opinion. We should be patient until they start the violence. There's nothing the almighty expects from us but patience in this critical situation.

    Violence is exactly what those Buddhist extremists expects, and they want us to begin. So, they could justify their activities. We must not let it happen. We have been inherited the moral way of Muhammadh(PBUH). Let's wait sometime. Let them start it, we'll reply with one ending that the whole country and the current government had never even thought of.

    Asad Sali is the only one who speaks out for us. The only weak point of him is that he is not broad-minded. Which means, he doesn't know what would happen in the future because of his speeches. We definitely want his voice against extremism, not his leadership.

    Muhammadh(PBUH) is our leader, Allah is our guardian.

    Allahu Akbar. La'ilaha Illallah; Muhammadhar' Rasulullah.

    ReplyDelete
  11. slahy is well noted commenter.he always looks azath sally s speech WITH A CORNER EYE.why because SLAHY always arises a question about riyas sally.i think azath sally should clarify the fact about him.KOLAI THANNAI KAAPATRI KOLLA PAVIKKUM SOL PORUMAI.AWAN KADASIVARI PORUMAI ILAKKAMATAN.INNUM ANIYAYAM THALAI VIRITHTHADA WENUM.

    ReplyDelete
  12. Good warning to the Rajapaksa and Co. All the Muslims have to support to Mr. Aasath saaly.

    ReplyDelete
  13. analyser...

    i agree with,

    அதோட சிலருக்கு சில சிக்கல்கள் உள்ளன, அது தனிப்பட்ட சிக்கல்களாக இருக்கின்றபோதும், அவைகளைக்கொண்டு வந்து சமுதாயப்பிரச்சினைகளுடன் முடிச்சுப்போட்டு நடப்பவைகள் நல்லவைகளானாலும் அவர்களுக்கு தீயவைகளாப்படுமிடத்து அனைவரும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பது முட்டாள்தனமானவை, நான் ஒரு தடவை இந்த சிலாகையிடம் இது விடயமாக பின்னூட்டத்திற்கு பதிலளித்தபோது என்னையும் அனாகரிகமாக பேசியவர்தான் இந்த சிலாகை(Slahy) என்னவோ அவர்தான் சொர்க்கத்துக்கு நன்மாராயம் கூறப்பட்டவர்போன்று சொல்லியிருந்தார். ஆகவே அவருடைய தரம் கண்டு நான் விலகிக்கொண்டேன் ஆகவே இவரைப்பற்றி நாம் கவலைகொள்ளத்தேவையில்லை இத்போன்ற எத்தனையோ களைகள் வளரத்தான் செய்யும் அவைகளை எண்ணி நாம் அலட்டிக்கத்தேவையில்ல. முசம்மிலை பாருங்களேன் உதாரணத்திற்கு.

    ReplyDelete
  14. @Salahy...நீர் கூறும் பொறுமையில் எல்லை எதுவரை..? அரசியல் உள் நோக்கம் வைத்துகொண்டு ஆசாத் சாலியை குறை கூறுவதில் இருந்தும் தவிர்ந்துகொல்வது உமக்கு நல்லதென்று நினைக்கிறேன்..
    வெட்கம் கெட்ட கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இவர் 100 மடங்கு பெறுமதியானவர், உமது குறுக்கு கதைகளை குப்பையில் போடும்....

    ReplyDelete
  15. musligalidaye seendi parka nenaikathe khavi udayel ulla khadayergal seeralinthu weduweergal ASAATH SALIKKU ALLAHA BARAKTH SEYWANAGA AHMEEN

    ReplyDelete

Powered by Blogger.