யாழ்ப்பாணத்தில் முதலாவது கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சுயேட்சைக் குழுவொன்றில் சார்பில் நேற்றுக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
அ.மாணிக்கசோதி என்பவரே சுயேட்சைக்குழுவாகப் போட்டியிடுவதற்கு கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளார்.
இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சுயேட்சைக் குழுவொன்றுக்குத் தலைமை தாங்கிப் போட்டியிட்டிருந்தார்.
1989இல், பிறேமதாச அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான ஏற்பாட்டாளராகச் செயற்பட்டவரே மாணிக்கசோதி என்பது குறிப்பிடத்தக்கது. pp
.jpg)
Post a Comment