Header Ads



'சமூகத்தை காட்டிக்கொடுக்காமல் அரசியல் மேற்கொண்டு வருகின்றோம்'

(ஏ.எல்.ஜனூவர்)

கடந்த கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் போது பள்ளிவாசல் உடைப்புக்கெதிராக மரச்சின்னத்திற்கு வாக்களியுங்கள், கிழக்கு மாகாண பொம்மை ஆட்சியை ஒழிப்போம், முஸ்லிம் சமூகத்தின் குரலாக இருப்போம் என்றெல்லாம் வீர வசனம் பேசிய முஸ்லிம் காங்கிரஸ் பொம்மையாகிய நிலையில் தற்போது பிரதேசவாத கருத்துக்களை பரப்பிவருகின்றது. அட்டாளைச்சேனையை நான் காட்டிக்கொடுத்ததாக கூறுவது வேடிக்கையாக உள்ளதென கிழக்கு மாகாண சபை அமைச்சரவை பேச்சாளரும் வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம். உவைஸ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் தனது சொந்த ஊருக்கு வரும் நிதியினை வேறு பிரதேசத்திற்கு திசை திருப்பிய அமைச்சர் உதுமாலெப்பை வரலாற்றுத் துரோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து தொடர்பாக விபரம் கேட்ட போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாங்கள் எச்சந்தர்ப்பத்திலும் சமூகத்தையோ, பிரதேசத்தையோ காட்டிக்கொடுக்காமல் அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம். கிழக்கு மாகாணத்தில் நிலவிய யுத்த நிலைமையினை இல்லாமல் செய்து தொடர்ந்தும் அச்சத்துடன் வாழ்ந்து வந்த முஸ்லிம் சமூகத்தை அமைதியாக வாழக்கூடிய நிலை உருவாவதற்கும் கிழக்கு மாகாணத்தில் அருந்து போய் இருந்த இன உறவுகளை கட்டி எழுப்புவதற்கும் கிழக்குமாகாண சபையின் ஊடாக வரலாற்று அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வதற்கும், தேசியகாங்கிரஸின் தலைமை பெரும் பங்காற்றியுள்ளது. நாங்கள் எப்போதும் நாட்டையோ, பிரதேசத்தையோ காட்டிக்கொடுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளை ஒரு போதும் செய்த வரலாறு கிடையாது.

ஒவ்வொரு தேர்தல் காலங்கலிலும் பொத்துவில் பிரதேசத்திற்கு பல ஏஜன்டுகள் மூலம் வாக்கு வேட்டைக்காக செல்லும் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் அம்மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அதிகப்படியான வாக்குகளையும் பெற்றுவிட்டு அம்மண்ணுக்கு இருந்த அரசியல் அதிகாரத்தினையும் இல்லாமல் செய்து விட்டும் அம்மண்ணுக்கு அவர்களால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் எங்களால் செய்யப்படும் அபிவிருத்தி வேலைகளையும் தடுக்க நினைக்கின்றார்கள். அம்மக்கள் எங்களுக்கு குறைந்த அளவிலான வாக்குகளை அளித்த போதிலும் அம்மக்களுக்கு பாரிய வரலாற்று அபிவிருத்தி பணிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.

முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் இந்நாட்டின் நீதி அமைச்சராக பதவி வகிக்கின்றார். நீதி அமைச்சு தொடர்பான எல்லா விதமான பணிகளையும் நீதி அமைச்சின் ஊடாகவே மேற்கொள்ளப்படவேண்டும் என்பதினை தேசிய காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்கின்றது. அதே போல் இந்நாட்டின் உள்ளுராட்சி மாகாண சபைக் அமைச்சராக ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் செயற்படுகின்றார்கள். உள்ளுராட்சி மன்றங்களின் தேவைகளை அவர் ஊடாகவே நிறைவேற்ற முடியும் என்பதை விட்டு விட்டு வீண்பிரதேச வாதத்தை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசுகின்றனர்.

மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் கிழக்கு மாகாண மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என விரும்பினார். அதற்காகவே குரல் கொடுத்தார். கிழக்கு மாகாண மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க பல அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவிற்கு பின்னர் றஊப் ஹக்கீம் அவர்களினால் எடுக்கப்பட்ட எந்த தீர்மானமும் முஸ்லிம் சமூகத்திற்கும் மாத்திரம் அன்றி நாட்டிற்கும் நல்லதாக அமையவில்லை. 

யுத்தத்தை நிறுத்திய ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்கள் 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வந்து இந்நாட்டில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவேன், கிழக்கு மாகாணத்தை பிரித்துத்தருவேன், மூவின மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித்தருவேன் எனக்கூறி மக்கள் ஆணையை வேண்டி நின்ற போது ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் வடக்கு கிழக்கு மாகாணங்களை இரண்டு வருடங்களுக்கு விடுதலைப்புலிகளுக்கு நிருவாகம் செய்ய தருவேன் எனக்கூறி மக்களின் ஆணையை கேட்டார். கிழக்கு மாகாண மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு பக்கபலமாக இருந்து அரசியல் தீர்மானம் எடுக்கவேண்டிய முஸ்லிம் காங்கிரஸ் அன்று வட கிழக்கு இணைப்பிற்கும் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் எதிராக ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்ததன் மூலம் வரலாற்று பிழை செய்தார்கள்;.

2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் யுத்தத்தை நிறுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என முஸ்லிம் மக்களை வேண்டிய போது இந்நாட்டின் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் என்று கூறி முஸ்லிம் மக்களின் வாக்குகளை அளித்து அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் முஸ்லிம் மக்களை காட்டிக்கொடுத்தார்.

11 comments:

  1. When will you change your answer when ever ask any question to him he always reply like it,What they have asked and what did you replied?

    Please go ahead leave it all and Can you say any comments about current issue against muslim.

    ReplyDelete
  2. புத்திசாலித்தனமாக அறிக்கை விடுகிறோம் என்ற நினைப்போ?

    ReplyDelete
  3. we don't need any word of contravention but need genuine action for the welfare to our community

    ReplyDelete
  4. We Muslims strongly inform to (Muslims politicians} we don't want your each other blaming if not mahiyangana mosque re open for as usual activities we are not willing to vote for (Muslim congress and national congress. both party never get this time vote we Muslims will support to UNP only other whys we denied to vote for any party.now we understood the reality of politicians their looking their pocket only selfish buggers.

    ReplyDelete
  5. மாகாண அமைச்சர் அவர்களே.

    முஸ்லிம் காங்கரஸ் கட்ச்சினர் மாத்திரமே அரசாங்கத்துடன் முஸ்லிம் சமுகத்தின் பிரச்சனைகளை பேசி தீர்வு கான வேண்டும் என்று நிர்பத்திக்கபட்டுள்ளர்களா ?????

    முஸ்லிம் காங்கிராஸ்ஸை பிரதி நிதிப்படுத்தும் பாரளுமன்ற,மாகாணசபை ,நகரசபை ,பிரதேச, உறுப்பினர்களுக்கு மக்கள் ஆணை கிடைக்கவில்லைய ?????

    முஸ்லிம் காங்கரஸ் கட்ச்சினர் மாத்திரமே முஸ்லிம் சமூகத்தை காட்டி சுயநல அரசியல் செய்கிறார்களா ?????

    முஸ்லிம் காங்கரஸ் கட்ச்சினர் மாத்திரமா முஸ்லிம் சமூகத்தை வழி நடத்தக்குடியவர்கள் ?????

    உங்கள் தேசிய காங்கரஸ் ஏன் அரசுடன் இணைத்துள்ளது ?????

    உங்கள் தேசிய காங்கரஸ்சால் ஏன் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைய பேச முடியாதுள்ளது ????? காரணத்தை உங்களால் தர முடியுமா ?????

    உங்கள் தேசிய காங்கரஸ்சின் தேசிய தலைவரினால் இது வறைக்கும் ஏன் ஒரு கண்டன அறிக்கைய விடவில்லை முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் ?????

    உங்களால் மற்றும் உங்கள் கட்சினரால் மக்கள் ஆணைய பெற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் உண்மை

    உங்கள் கட்சி முஸ்லிம் சமூகத்தின் கட்சி இல்லையா ????? அவ்வாறாயின் அது யாருடைய கட்சி பதில் தர முடியுமா?????

    ஏன் உங்கள் கட்சினரால் முஸ்லிம் காங்கிராஸ்ஸையே அல்லது மக்கள் காங்கிராஸ்ஸையே வப்புக்கு இழுக்காமல் இருக்க முடியாத ?????

    சில வருட காலமாக உங்கள் கட்சினர் மாத்திரமே முஸ்லிம் சமூகத்தை காட்டி கொடுத்து சுயநல அரசியல் செய்துள்ளார்கள் என்பது மிகவும் தெளிவாகிறது

    நிங்களோ அல்லது உங்கள் கட்சில் அங்கம் வகிக்கும் உருப்பிர்களுக்கோ முஸ்லிம் சமூகத்தைப் பற்றி அக்கறை இருப்பின் அரசிலிருந்து விலகி காட்டுங்கள் பார்போம்

    உங்கள் கட்சினரால் தற்போது மூடப்பட்டு இருக்கும் மஹியங்கல பள்ளிலை மீட்டு தர முடியுமா அவ்வாறாயின் செய்து காட்டுங்கள் பார்ப்போம்

    இலங்கை முஸ்லீம்களின் சகோதரன்
    எம் .எம் .ஏ .எம்.றிலான்

    ReplyDelete
  6. மூவின மக்களும் நிம்மதியாக வாழலாம் என்று ஜனாதிபதி சொன்னாரா! யாரு? நம்ம நாட்டு ஜனாதிபதியா!
    வடக்கு கிழக்குல மட்டுமில்ல நாட்டுல எந்தப் பகுதியிலயும் நிம்மதியா வாழ விடமாட்டேங்குறாங்களே!
    அதத்தானே பாக்ககுறம் தம்புள்ளயிலிருந்து மகியங்கன வரையும்.
    சும்மா ஆளுக்கள் வசபாடுறத உட்டுப்போட்டு ஆகவேண்டியதப் பாருங்கோ.
    தலைவர் பாட்டுப்படிச்சி றமழான வரவேற்றரே. இப்ப எங்க? பெருநாள் கச்சேரிக்கு ஒத்திக பாக்கப் பெய்த்தாரோ! சத்தத்தையே காணோமே!

    ReplyDelete
  7. Muslims,wherever they live in Srilanka,should rise up against all
    form of racism,be it Buddhist,Hindu or Muslim.Let us first love
    our land where we live to follow our religion.Let us not be taken
    for a ride by selfish opportunist politicians who will do anything
    for their survival and let us tell them what we want and not them
    telling us what we need.Our religious beliefs should not be
    allowed to be manipulated by anyone for their selfish ends.

    ReplyDelete
  8. Hereafter we will cast our votes to UNP. You muslim MPs useless.
    You like to fill your own pockets only.
    No one has good manners and responsibilities from Muslim politicians now.
    So, don't blame others you all are in the same board.
    On our research and study you are the number one culprit, selfish and all nuisance activities are done by yourselves.

    ReplyDelete
  9. மாகாண அமைச்சருக்கு ஊரில் நடமாட முடியாத நிலை தோன்றியுள்ளது.

    ஏன் தெரியுமா? அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அட்டாளைச்சேனை அபிவிருத்திக்கு என்று வந்த 10 கோடியை திருப்பி பொத்துவில் பிரதேச தவிசாளருடன் ஒரு இரகசிய ஒப்பந்தத்தை செய்து அந்த 10 கோடிக்கும் 30 வீதம் கொமிஷன் கேட்ட விடயம் சந்திக்கு வந்துவிட்டது.

    உதுமாலெப்பை அமைச்சர் யாருடன் கொமிஸன் ஒப்பந்தம் செய்தார் என்ற சுயநினைவை விட்டு விழகி ஒரு முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரிடம் 10 கோடிக்கான 30 சதவீத ஒப்பந்தத்தை செய்துள்ள விடயம் தற்போது எல்லா மக்களுக்கும் தெரிந்து இந்தக் கதை சந்திக்கு வந்துள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த அட்டாளைச்சேனை மக்கள் அவரின் இந்த கேடுகெட்ட செயலை செய்த உதுமாலெப்பைக்கு எப்படியப்பா ஊரில் இருக்க முடிந்தது.

    தன்மானம் இழந்தவருக்கு எதுபோனாத்தான் என்ன?

    ஆனால் அவரின் செயலை மறைப்பதற்காக ஒரு சம்மந்தமில்லா அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். அதுவும் ஓரு வாரம் கழிந்த பின்னர்தான் இதனை விடுத்துள்ளார். பிரதேச சபை உறுப்பினர் உவைசினால் விடுக்கப்பட்ட அறிக்கைக்கு சரியான பதில் அமைச்சர் உதுமாலெப்பையினால் கொடுக்கப்படவில்லை.

    எதையெதையேல்லாமோ அபிவிருத்தியென்று பட்டியலிட்டுள்ளார். இவரின் சேவை மக்களுக்குத் தெரியும். இவர் எப்படிப்பட்டவர் எந்தச் சேவையை செய்தார். எந்தச் சேவையையும் செய்யாமல் பெயர்வாங்க நினைக்கும் ஒருவர்தான் இவர்.





    ReplyDelete
  10. நல்ல வேளை.. இவரு தலைப்பில் 'கா'வன்னாவுக்கு பதிலாக 'கூ'வன்னாவைப் போடாம விட்டாரு. மக்கள் கூய் போட்டிருப்பாங்க..!

    'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்.. அவன் மாம்பழம் வேண்டுமென்றான்..' அமைச்சர் அதாவின் குரல் இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  11. அந்தா பாத்தீங்களா.. மஹிந்த சிந்தனை அரசாங்கத்தில ஊத்தவாளி வேல செய்யாதவன் ஒருத்தனும் இல்ல என்ட நிலைதான் நாட்டின் நாலா பக்கத்திலும் இருக்கு?

    இவனுக அத்தன பேருமே கொமிஷன் வாங்கும் கொங்றீட் கொந்தராத்து யாவாரிமாருதான்.

    இதத்தான் எங்க ஊருல நடந்த கூட்டமொன்டில நல்லாட்சிக்கான மக்கள் இயக்க அப்துர் றகுமான் பகிரங்கமா சொன்னாரு.

    'மினிஸ்டர் 10 லட்சம் அபிவிருத்தி என்டா அதில 4 லட்சம் அவருக்கும், கால் வாலுக்கும். ஒரு கோடி அபிவிருத்தி என்டாரெண்டா 40 லட்சம் அவருக்கும் கால் வாலுக்கும். பத்துக் கோடியில் அபிவிருத்தி என்டாரெண்டா 4 கோடி அவருக்கும் கால் வாலுக்கும், நூறு கோடியில அபிவிருத்தி என்டாரெண்டா 40 கோடி அவருக்கும் கால் வாலுக்கும்' - என்ன அருமையான தத்துவம்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.