Header Ads



மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும், ஊடக ஆற்றலையும் எடுத்துக்காட்டிய இளைஞர் ஊடக மாநாடு


யாழ் இளைஞர் யுவதிகள் கலந்து கொள்ளும் ஊடகச் சுற்றுலாவும் சமூக ஊடகத்தின் வாயிலான சமூக வலுவாகம் தொடர்பான ஐந்து நாள் வதிவிடச் செயலமர்வும் கொழும்பில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது. 

ஜூலை 17ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்டத்ததைச் சேர்ந்த 20 இளைஞர் யுவதிகள் பங்குபற்றினர். இவர்களுள் 14 பெண்களாவர். யாழ். பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் மற்றும் ஊடகம் தொடர்பான கற்கைகளில் ஈடுபடும் 16 மாணர்களும் இதில் பங்குபற்றினர். 

தெரிவு செய்யப்பட்ட இருபது இளைஞர்களை சமூகத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளை எடுத்துக்கூறலுக்கான பிரதான பங்குதாரர்களாக மாற்றுவதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும். மேலும் இப்பிரச்சினைகளுக்காக பொது மக்களை ஒன்றினைத்து செயற்படுத்துதல், இப்பிரச்சினைகள்; தொடர்பாக இயங்குகின்ற சிவில் சமூகத்தினை வலுப்படுத்தலும், பிரதான நிலை ஊடகளினூடாக உரையாடலினை மேற்கொள்தல் மற்றும் மக்கள் தமது பிரச்சினைகளை எடுத்துக்கூறுவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொடுத்தல் என்பன இத்திட்டத்தில் உள்ளடங்கும் இலக்குகளாகும். 


No comments

Powered by Blogger.