காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியால மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
டெங்கு ஒழிப்பு தினம் 2013 ஐ முன்னிட்டு மட்டக்களப்பு காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆட்கொல்லி டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஜனாபா ஜெஸீமா முஸம்மில் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.சுபைர்,பொதுச் சுகாதாரப் பரிசோதகர் திரு.டீ.மிதுன்ராஜ்,பாடசாலை ஆசிரியர்கள்,மாணவிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மாணவிகள் 'அசுத்தத்தை இல்லாது ஒழிப்போம்' 'பேணுவோம் பேணுவோம் சூழலை சுத்தமாக பேணுவோம்' 'ஒழிப்போம் ஒழிப்போம் டெங்கை முற்றாக ஒழிப்போம்' 'தடுப்போம் தடுப்போம் நுளம்புப் பெருக்கத்தை தடுப்போம்' என மும்மொழிகளிலும் (ஆங்கிலம்,சிங்களம்,தமிழ்)எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.



Post a Comment