Header Ads



மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம் முதலாம்மிடம்

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் மேற் கொள்ளப்பட்ட  2011ம்ஆண்டுக்கான கா.பொ.த.சாதாரண தர பரீட்சைகளின் பேறு பெறுகளின் ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் மட்-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம் கிழக்கு மாகாணத்திலுள்ள (சிங்கள,தமிழ்,முஸ்லிம்) உள்ளடங்கியதாக 498 பாடசாலைகளில் அல்-ஹிதாயா மகா வித்தியாலயம் முதலாம்மிடம் பெற்றமை வரலாற்று சாதனையாகும்.

கடந்த 30 வருட யுத்ததினாலும் அனர்ந்தங்களினாலும் பாதிக்கப்பட பதுரியா,மாஞ்சோலை,செம்மண்னோடை,மீராவோடை கிழக்கு மேற்கு என உள்ளடங்களாக கொண்ட இப் பாடசாலை மாகாணத்தில் முதலாம்மிடம் பெற்றமை இப் பிரதேச வரலாற்றில் ஒரு மயிற்கல்லாகும். பாடசாலையின் வரலாற்றில் ஒரு சரித்திரமாகவும் கருதப்படுகின்றது. 

இப் பாடசாலை மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.  மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் சிறந்த ஒரு உயர் தரப் பாடசாலையாக மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம் 1300 மாணவர்களையும் 45 ஆசிரயர்களையும் கொண்டுள்ளதோடு  கலை பிரிவு,வர்தகபிரிவு,மற்றும் தற்போது விஞ்ஞானப் பிரிவு,கனிதப்பிரிவுகளும் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பான ஆசிரியர்களை கொண்டு இயங்கி வருகின்றது. 



1 comment:

Powered by Blogger.