புல்மோட்டை பிரதேச பிரதான வீதிக்கான வீதி மின் விளக்கு மின்சார வேலைத்திட்டம்.
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.பி .முபாரக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை கனியமணல் கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் புல்மோட்டை பிரதேச பிரதான வீதிக்கான வீதி மின் விளக்கு மின்சாரத்திட்டம் பொருளாதார பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே அவர்களினால் உத்தியோக பூர்வமாக நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை கனியமணல் கூட்டுத்தாபன தலைவர் டிசான் குணசேகர அவர்களிடம் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.பி .முபாரக் அவர்கள் இதற்கான வேண்டுகோளை விடுத்த போது எவ்வித மறுப்புமின்றி உடனடியாக ஏற்பாடுகளை செய்ததன் நிமிர்த்தம் இந்த வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டு மின் ஒளியால் அழகு படுத்தபட்டுள்ளன.
இருள் சூழ்ந்த வீதிகளில் பயணித்த புல்மோட்டை வாழ் மக்கள் கடந்த காலங்களில் போக்குவரத்தில் பல சிரமங்களை எதிர்நோக்கினர்.ஆனால் இன்று மின் ஒளியில் வீதிகளில் அச்சமின்றி பயணிக்கின்ற சந்தோQசமான சூழல் ஏற்பட்டுள்ளதையிட்டு மக்கள் மகிழ்ச்சி அடைவதோடு புல்மோட்டை பிரதேசத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த வீதி மின் விளக்கு பிரச்சினைக்கான தீர்வினை பெற்று தந்த சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு நன்றியினையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதமடைகின்றனர்.

Post a Comment