வெலிக்கடை சிறைச்சாலையில், சிறைச்சாலைகள் தின வைபவம் கொழும்பு
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
சிறைச்சாலைகள் தினத்தையொட்டி மாபெரும் வைபவமொன்று நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் நடைபெற்றது.
இதன்போது இறந்து போன சிறைச்சாலை அத்தியட்சகர்கள்,ஜெயிலர்கள் என்பவர்களை நினைவு கூறும் வண்ணம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இரத்ததான வைபவம்,சிரமதான நிகழ்வு என்பன இடம்பெற்றன.
இதன்போது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ்.விதானகே,அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment