சிரியா போர்க்களத்தில் தலிபான் போராளிகளும் குதிப்பு..!
ஆப்கானிஸ்தானில் போராளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் மத்திய ஆசியாவை சேர்ந்த வீரர்கள் சிரியாவிற்குள் சென்றுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக சிரியாவில் பாகிஸ்தானை சேர்ந்த தலிபான் தெரீக்-இ-தலிபான்கள் முகாம் அமைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி முகாமின் தலைவர் முகமது அமின் பி.பி.சி. நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சிரியாவில் உள்ள ஜிகாதி போராளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாங்கள் அங்கு முகாம் அமைத்தோம். இங்கு, போர்முறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த எங்கள் இயக்கத்தை சேர்ந்த 12 பேரை அங்கு அனுப்பிவைத்திருக்கிறோம்.
இந்த முகாமிற்கு பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் குழுக்களான பாகிஸ்தான் தெரீக் இ தலிபான்கள் உள்பட மற்ற இயக்கங்களும் ஆதரவு அளித்துள்ளன.
இந்த முகாமிலுள்ளவர்கள், சிரியாவில் நடக்கும் சண்டைகள் பற்றிய செய்திகளை உடனுக்கு உடன் அறிந்து பாகிஸ்தானுக்கு அனுப்பி
வருகின்றனர். இந்த முகாம் ஆப்கானிஸ்தானில் முன்பு சண்டையிட்ட எங்கள் இயக்க வீரர்கள் மற்றும் ஜிகாதி இயக்க வீரர்களுக்கும்
தேவையான உதவிகளை செய்யும்.
இந்த 12 பேரும், சிரியாவில் பெரும்பான்மையாக உள்ள சன்னி முஸ்லிம்களின் அறிவுரையை ஏற்று ஷியா பிரிவு அதிபருக்கு எதிரான
நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆம் அங்குள்ள அப்பாவி மக்களை எல்லாம் கொன்று புதைத்துவிட்டு போரளியும் எதிராளியும் ஆட்சி செயுங்கள்
ReplyDelete