Header Ads



கடைகளை மூடி ஜும்ஆ தொழுகைக்கு பதிலாக லுஹர் தொழுத மஹியங்கனை முஸ்லிம்கள்

(மொஹமட் பாயிஸ்)

மஹியங்கனை ஜும்மா பள்ளிவாசல் மூடப்பட்டதை அடுத்து பதுளை ஜும்மா பள்ளிவாசல் ஜும்மா தொழுகையைடுத்து விசேட துஆ பிரார்த்தனையொன்று உருக்கமான முறையில் இடம்பெற்றன. இன்றைய ஜும்மா பிரசங்கத்தை நடாத்திய இமாம் மௌலவி சலீம் துஹா பிரார்த்தனையும் தொழுகையை அடுத்து நடத்தினர். 

மஹியங்கனை ஜும்மா பள்ளிவாசல் இன்று ஜும்மா தொழுகைக்கு தயாராகி கொண்டிருந்த வேளை பிரதேசத்தின் ஊவா மாகாண அமைச்சர் ஜும்மா தொழுகை நடாத்த வேண்டாம் எனவும் அப்படி தொழுகை நடாத்தப்படின் பிரச்சினைகள் ஏதும் ஏற்படலாம் எனவும் தெரிவித்தததை அடுத்து மகியங்கனை ஜும்மா பள்ளிவாசலில் இன்று ஜும்மா தொழுகை நடைபெறவில்லை. 

அதனையடுத்து அங்குள்ள முஸ்லிம்கள் அருகிலுள்ள பங்கரம்மன எனும் பள்ளிவாசலுக்கு செல்ல ஆயத்தமான போது ஒரு சிலர் அச்சம் காரணமாக வர்த்தக நிலையங்களுக்குள்ளேயே லுஹர் தொழுகையை கடைகளை மூடி தொழுது கொண்டதுடன், இன்னும் சிலர் பங்கரகம்மனைக்கு சென்று ஜும்மா தொழுகையை நிறைவேற்றியுள்ளனர். 

தற்போது பிரசேத்தில் பதற்ற நிலைமை ஒன்று காணப்படுகிறது. அடுத்த மாதம் அங்கு இடம்பெறவுள்ள பொதுபல சேனாவின் கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் தற்போது மும்முறமாக இடம்பெற்று வருகின்றன. 

இந்நிலையிலேயே பள்ளிவாசல் பலாத்காரமாக மூடப்பட உத்தரவிடப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. இது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவரிடம் தற்போது தொடர்பு கொண்டு வினவிய போது பொலிஸார் வருகை தந்து வாக்குமூலம் ஒன்றை பெற்றுகொண்டிருப்பதாக தெரிவித்து தொலைபேசி தொடர்பை துண்டித்தார். பிரதேச பள்ளிவாசல் அகற்றப்படுவது சுலபமான விடயம், இருப்பினும் அங்குள்ள முக்கிய முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களை அகற்ற வேண்டும் என்பதும் உள்நோக்கமாக இருப்பதாக தெரிய வருகிறது. பதுளையிலிருந்து மேற்படி கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

6 comments:

  1. Allaha erikkran kandippaga jumha tholugai nirtuiya khadayagalai nonbu 27 munbu Allaha thandani koduppan AHAMEEN AHAMEEN AHAMEEN INSHA ALLAHA Parpoham

    ReplyDelete
  2. சதி காரர்களுடைய சதிகளை அவர்கள் மீதே திருப்பி விட வல்லமை படைத்த அல்லாஹ்வின் தண்டனை அவர்களுக்குக் கிடைக்கும் பொழுது ஏன் நாம் இந்த அநியாயத்தை செய்துகொண்டோம் என்று வதையில்துடிப்பதை இன்ஷா அல்லாஹ் காணத்தான் போகிறோம். துஆக்கள் அதிகமாக ஏற்றுக்கொள்ளப்படும் இந்த மாதத்தில் எல்லோரும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக.

    ReplyDelete
  3. Where are our Muslim leaders, why they are still supporting the government? Government ministers are publicly warning Muslims to close down the Mosques preventing praying Jummah.

    ReplyDelete
  4. ya allah help the muslims in the world

    ReplyDelete
  5. இனியாவது தொழுகைகளில் குனூத் ஓதுவதற்கு அ.இ.ஜ.உ. அனுமதி வழங்குமா?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  6. முஸ்லிம் அமைச்சரகள்,பா.உறுப்பினர்கள்,அரசியல் வாதிகளுக்கெதிரான அமைப்பொனறை உருவாக்க நான் தயார்.நீங்கள் தயாரா?

    ReplyDelete

Powered by Blogger.