டுபாய் பொலிஸாரின் பார்வையில் ''சட்டத்தின் முன் யாவரும் சமமே'' (படம் இணைப்பு)
(Inne) துபாய் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அரபி ஒருவரின் காரை, இந்திய ஓட்டுனரின் வேன் ஒன்று லேசாக உரசியதால் கோபம் கொண்ட அரபி, நடுவீதியில் இந்திய ஓட்டுனரை தாக்கிய சம்பவம் படம் பிடிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் பகிரப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து இந்தியரைத் தாக்கிய அரபி மீது துபாய் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த துபாய் காவல்துறை, ஐக்கிய அரபு அமீரகச் சட்டப்படி சகமனிதனைத் தாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். அதன்படி, சம்பந்தப்பட்ட அரபு அலுவலரைக் தேடிக்கண்டுபிடித்து விசாரித்தபோது அவர் தனது தவறை ஒப்புக்கொண்டதுடன், தனது செயலுக்காக வருத்தமும் தெரிவித்தார். எனினும், வெளிநாட்டு ஊழியரைத் தாக்குவது சட்டப்படி குற்றம் என்பதால் அவர்மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், தனிநபரின் அனுமதியின்றி அவர்களைப் படம்பிடிப்பதும், சமூக வலைத்தளங்களில் பரப்புவதும் உரிமைமீறல் என்ற வகையில் இணையத்தில் பரப்பிய நபர்மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான இந்தியரின் நிறுவன மேலாளரிடம் இதுகுறித்து கேட்டபோது, நிகழ்ந்த சம்பவம் காவல்துறையில் வழக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் தன்னால் கருத்துக்கூற இயலாது என்றும், தாக்குதலுக்குள்ளான நபர் தற்போது ஓய்விலிருப்பதாகவும் தெரிவித்தார்.
ட்விட்டர் தளத்தில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற ஒருவர், சட்டத்தின்முன் அனைவரும் சமம்; யாரும் விதிவிலக்கல்ல என்று கருத்து தெரிவித்திருந்ததற்குப் பதிலளித்த துபாய் காவல்துறை, இந்தக்கருத்தை மேற்கோளிட்டு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About a couple of decades back,I was travelling
ReplyDeletein Europe with a friend at the driving seat and
at colour light he hit a car that was waiting for
green light.The man in the car came to us and
the first thing he did was to look for anyone
injured.How generous and humane that
gentleman was?Can this fellow even stand
near that kind of a character? This is why BBS
ridicule us when we say our ancestors were
of Arab origin.And remember this Arab won't
attack another fellow Arab for an accident like
this.
'No Arab or Persian is better, but, except those who has Thaqwa!'
ReplyDelete