கல்முனை அல்மஸ்ஜுதுல் ஜாமிஆ ஜும்ஆப்பள்ளிவாயலில் பெண்கள் தொழுவதற்கான வசதி
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
தென்கிழக்கின் முகவெற்றிலையான கல்முனை மாநகரிலுள்ள அல்மஸ்ஜுதுல் ஜாமிஆ நகர ஜும்ஆப்பள்ளிவாயலில் தற்போது பெண்கள் தொழுவதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.
கல்முனை மாநகரில் மாநகர சபை,பிரதேச செயலகம்,பொலிஸ் நிலையம்,பொதுநூலகம்,பஸ்தரிப்பிடம்,பஸார் ஆகியவற்றுக்கு மத்தியில் அமைந்துள்ள இப்பள்ளிவாயல் நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும்.கல்முனை பிரதேசத்திற்கு வந்துசெல்லும் உள்ளூர் மற்றும் வெளியூர் பெண்கள் தொழுவதற்கான வசதிகள் கல்முனை மாநகரிலுள்ள எந்தப்பள்ளிவாயலிலும் இருக்கவில்லை.மிக நீண்டகாலமாக கல்முனை மாநகரில் இருந்து வந்த இக்குறைபாட்டை அல்மஸ்ஜுதுல் ஜாமிஆ ஜும்ஆப்பள்ளிவாயலின் தலைவரும் முன்னாள் மாகாண சபை உருப்பினருமான கே.எம்.ஏ.றஸ்ஸாக் (ஜவாத்) அவர்களும்,நிருவாகமும் மேற்கொண்டு வந்த முயற்சியின் பயனாக இப்பள்ளிவாயலில் தற்பொது பெண்கள் தொழுவதற்கான தனி பள்ளிவாயல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இங்கு வரும் மக்களின் நன்மை கருதி தற்போதைய நிருவாகம் மேற்கொண்டு வரும் நிர்மானப்பணிகளைஅனைவரும் பாராட்டுவதோடு இப்பள்ளிவாயல் தற்போது புதுப்பொளிவுபெற்றுள்ளது.இங்கு சகல ஜமாஅத் உறுப்பினர்களும் தொழுகைக்காக வந்து செல்வது விஷேட அம்சமாகும்.இப்பள்ளிவாயல் இங்குள்ள ஜமாஅத்களை ஒன்றிணைக்கும் மத்திய நிலையமாகவும் செயல்படுகின்றது.

உண்மையில் பாராட்ட வேண்டிய விடயம் ...வாழ்த்துக்கள் ஜவாத்,இதே போன்று மர்ஹூம் தலைவர் பெயர் ஆசுபத்திரியின் முன்னால்உள்ள ஜும்மா பள்ளிவாசலிலும் பெண்கள் தொழுவதற்கான வசதிகளை அப்பள்ளி நிர்வாகமும் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் கல்முனை தொகுதி எம்.பி.ஹரிஸ் மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு..... நிறைவேறுமா....???
ReplyDelete