எத்தாபெந்திவௌ மக்கள் மறியல் போராட்டம்
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை –ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் 30-07-2013 ரொட்டவௌ,எத்தாபெந்திவௌ மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மொறவௌ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ரொட்டவௌ,எத்தாபெந்திவௌ வீதி பல வருட காலங்களாக புணரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதுடன், கிரவல் போடப்பட்டிருப்பதினால் சுவாச நோய்கள் ஏற்பட்டு வருவதை தடுக்க அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுமே கிராமமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டம் மதியம் ஒரு மணிவரை தொடர்ந்த நடைபெற்றதுடன் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைத்தலைவர் ஒரு வாரத்திற்குள் வீதி புணரமைப்புக்கான பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறி வேளை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். அத்துடன் ஒரு வாரத்திற்குள் புணரமைப்பு மேற்கொள்ளாவிட்டால் மீண்டும் மறியல் போராட்டத்தை நடாத்துவதாகவும் கிராமமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர


Post a Comment