Header Ads



ஜம்மியத்துல் உலமா கவனம் செலுத்துமா..?

(எம்.எம்.ஏ.ஸமட்)

ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஒழுங்கான உச்சரிப்புடனும் இனிமையான ராகத்துடனும் 'அதான்' சொல்லுவதற்கான பயிற்சிகள் முகத்தீன்களுக்கு வழங்க அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

இது குறித்து முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுவதாவது,

மக்களை வெற்றியின் பக்கம் அழைப்பதற்கான 'அதான்'; இலங்கையிலுள்ள ஓரிரு பள்ளிவாசல்கள் தவிர்ந்த ஏனையு சகல பள்ளிவாசல்களிலும் ஒலிபெருக்கிகள் மூலமே ஒலிக்கப்படுகின்றன. ஓர் ஊரில் 10 பள்ளிவாசல்கள் இருந்தால் ஒவ்வொரு பள்ளிவாசலிலிமிருந்து ஒலிக்கும் 'அதான்' ஓசையானது ஒவ்வொரு ராகத்தில் அமைந்துள்ளது. அதுமாத்திரமின்றி, அதானின் உச்சரிப்புகளை ஒவ்வொரு முகத்தீனும் ஒவ்வொரு விதமான உச்சரிப்புச்செய்து அதான் சொல்வதை கேட்க முடிகிறது.

விகாரைகளிலிருந்து ஒலிக்கப்படும் 'பணையும்' கோயில்களிலிருந்து ஒலிக்கப்படும் 'தேவாரமும்'; அதேபோல் தேவாலயங்களிலிருந்து ஒலிக்கும் 'ஆராதனையும'; ஒரே ஓசை, ஒரே ராகத்துடன்  வடிவமைக்கப்பட்டு ஒலிக்கப்படுகின்றபோது, பள்ளிவாசல்களிலிருந்து ஒலிக்கும் 'அதான்' மட்டும் ஒவ்வொரு ராகத்துடனும் ஒவ்வொரு ஓசையுடனும் ஏன் ஒலிக்கப்பட வேண்டுமென ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

அத்துடன், தனி முஸ்லிம் கிராமங்கள் தவிர்ந்த, பிற சமூகங்களுடன் முஸ்லிம்கள் வாழும்; பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களிலிருந்து இனிமையற்ற ஓசையுடன் ஒலிக்கும் அதானினால் ஒரு சில சமயங்களில் பிற சமூகத்தினர் எரிச்சலடைகின்ற நிலைமையும் உருவாகிறது. அவர்களால் அவற்றை சகித்துக்கொள்ள முடியாத நிலை தோன்றுகிறது. இதனால் அதான் ஒலிக்கும்போது அவர்கள் வெறுப்படைவதாக கூறிய சம்பவங்களும் உள்ளன.

இந்நிலை ஏன் உருவாகிறது. 'அதான்' சொல்லுவதிலும் நமக்குள் ஓர் ஒழுங்கமைப்பில்லையென்பதனால்தான் இந்நிலை தோற்றம்பெறுகிறது. யார் இவற்றில் மாற்றம் கொண்டு வருவது.  மாற்றங்கள் நமது சமூகத்தில் ஏற்படுத்தப்படுவது அவசியம். அந்த மாற்றங்கள் பள்ளிவாசல்களிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். அதன் முதற்கட்டமாக 'அதான்'; ஒலிப்பதில் ஒரு ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதானை இனிமையாக ஓரே ராகத்தில் ஒழுங்கான உச்சரிப்புடன் முகத்தீன்கள் சொல்லுவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

மாவட்டம் தோரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கிளைகள் உள்ளன. அவர்களின் நடவடிக்கைகள் காலத்திற்கேற்றவாறு சக்தி மிக்கதாக்கப்பட வேண்டும. வெறும் அறிக்கைகளையும் ஒரு சில சமய விடயங்களையும் மாத்திரம் நடாத்துவது இக்கிளைகளின் பணியாக இல்லாமல் காலத்துக்கேற்றவாறு சமூகத்தின் தேவை கருதியும்,  இஸ்லாத்தின் மகத்துவத்தை மேலோங்கச் செய்யும் வகையிலும் அவற்றினூடாக முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழவும் ஓர் ஒழுங்கமைப்பின் கீழ் செயற்படவும் கூடியதான செயற்றிட்டங்களை வகுத்து சமூகத்தோடு ஒன்றினைந்து செயற்படக் கூடியதாக உலமாக சபையின் கிளைகள் திறன்மிக்கதாக்கப்பட வேண்டுமென முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.

8 comments:

  1. Azan ellam ore raahaththil olippazatku azu onrum Banayo thevaramo allazu aaradanayo alla...azu ALLAH virumbuhira murayilthaan olikkum....

    ReplyDelete
  2. he he....enna koduma da....thottathuku pudichathuku ellam ippa ACJU kaaranam aagitu....

    ReplyDelete
  3. பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் பொருத்தப்பட்டுள்ள காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள மின் கம்ப ஒலிபெருக்கிகளில் தினமும் நான்கு வேளைகள் 'அதான்' சொல்லப்படுகின்றன. 'சுபஹு'க்கு மாத்திரம் அதான் சொல்லப்படுவதில்லை.

    அதை இயக்குபவர் தூக்கத்தில் இருக்கிறார். அவரை எழுப்பி விடாதீர்கள்'

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  4. அதான் மாற்று மதத்தவர்களின் விருப்பு மறுப்புக்காக வல்ல நபி (ஸல்)அவர்களின் வழிமுறையில் அலைத்தால் சரி நீங்கள் பள்ளிக்கு விரைந்து தொழுகையை நிறைவேற்றுங்கள் அல்லாஹ் தான் யாவற்றையும் அறிந்தவன்

    ReplyDelete
  5. சகோதரர் சமத் அவர்கள் நல்ல ஒரு விடயத்தைத்தான் சொல்ல வருகிறார். ஆனால் இடையில் ஏன் ஜம்இய்யதுல் உலமாவை குறைகூற முயற்சிக்கிறார் என்பது புரியவில்லை.

    சகோதரரே! அழகான தொனியில் அதான் சொல்லும் முஅத்தின்களை இனம்கண்டு அப்படியானவர்களை மஸ்ஜித்களில் முஅத்தின்களாக நியமிக்குமாறு பள்ளி நிருவாகிகளுக்கு நீங்கள் ஆலோசனை கூறி இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

    பள்ளி நிருவாகிகள் தகுந்த சம்பளம் கொடுக்க தயாரில்லை. எப்படி நல்ல முஅத்தின்கள் கிடைப்பார்கள்.

    பல பள்ளிகளில் முஅத்தின்கள் தேடும்போதே அவர்கள் மலசலகூடத்தை அழகாக சுத்தம் செய்பவர்களா என்பதைத்தானே பார்க்கிறார்கள். அவர்கள் அழகாக அதான் சொல்பவர்களா என்று யார் கவனிக்கிறார்கள்?

    5000 ரூபாய்க்கும் 6000 ரூபாய்க்கும் பள்ளி நிருவாகிகள் ஆள்பிடித்து வைத்திருப்பார்கள் அவர்களுக்கல்லாம் அழகான தொனியில் அதான் சொல்ல ஜம்இய்யதுல் உலமா பயிற்சி அழிக்க வேண்டும் என்கிறீர்கள்!!??

    ReplyDelete
  6. ஒவ்வொரு ஊரும் இறையச்சமுள்ள, படித்த, மார்க்க அறிவும் விளக்கமுமுள்ள, சமூகப்பற்றுள்ள, சுயநலமற்ற ஊர் வாசிகளை நிருவாகிகளாக தெரிவு செய்யுமானால், அதே நிருவாகிகள் மார்க்கத்தை கற்ற, குருஆனை அழகாகவும், தஜ்வீத் முறையிலும் ஓதக்கூடிய இமாம்களையும் இனிய தொனியில் பாங்கு சொல்லக்கூடிய முஅத்தின்கலையும் தெரிவு செய்வார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. எனவே ஜம்மிய்யதுல் உலமாவும், வக்பு சபையும் செய்ய வேண்டியது என்னவெனில் ஓவ்வொரு ஊர் மஸ்ஜித் நிர்வாகத் தெரிவின்போதும் மேட்குறிப்பிடபட்ட தகைமைகள் கடைபிடிக்கப்படுவதை உத்தரவாதப் படுத்துவது மட்டுமே.

    ReplyDelete
  7. Jaffna Muslim tell to this Samuha Awalarhal that, think about MUaddin Salary and ask Awalahhal how much they contribute to Muaddin Salary in his area, only can talk this not a article to publish

    ReplyDelete
  8. Good one Muhammed Irshad, all these guys can talk and write no practical knowledge

    ReplyDelete

Powered by Blogger.