Header Ads



புல்மோட்டை சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கான விசேட கலந்துரையாடல்..

(முஹம்மது றினாஸ்)

புல்மோட்டை பொலிஸ்  நிலையத்திற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கான  விசேட கலந்துரையாடல் நேற்று புல்மோட்டை சிங்கள வித்தியாலய பிரதான மண்டபத்தில் புல்மோட்டை  பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி  கனேகொட தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்துக்கான பிரதி பொலிஸ் மா அதிபர்
திரு, கபில விஜேசேகர கலந்து கொண்டார். இவர் இங்கு உரை நிகழ்த்துகையில்..

ஒரு பிரதேசத்தில் காணப்படுகின்ற குற்ற செயல்களை கட்டுப்படுத்துவதற்கும் நீதிச்சட்டங்களை முறையாக அமுல்படுத்துவதற்கும் சிவில் பாதுகாப்பு குழுக்களின் பங்களிப்பு  பொலிசாருக்கு இன்றியமையாதுள்ளன.அத்துடன் சட்ட விரோத செயற்பாடுகளை இல்லாதொழித்து அனைத்து  இன மக்களும் சமூக ஒற்றுமையாகவும் சமத்துவமாகவும் வாழும் சூழலை உருவாக்கும் பொறுப்பு சிவில் பாது காப்பு குழுக்களின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளன" என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் "அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள சி.பா.குழுக்கள் மற்றும் பொலிசாரும் இணைந்து நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலமே பிரதேசத்தில் இடம்  பெறுகின்ற குற்றசெயல்களை இல்லாதொழிக்க முடியும். மேலும் பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடயிலான உறவு, முறையாக பேணப்படுகின்றது. கடந்த 30பது வருடத்திற்கு மேற்பட்டிருந்த யுத்தம் முடிவுக்கு வந்தவுடன்  சிவில் சட்டம் ஒழுங்காக  பேணப்படுகின்றன.எவரும் எவ்வேளையிலும் எங்கும் சென்றுவரக்கூடிய நிலை  நாட்டில் காணப்படுகின்றதன.இதனை மேலும் திறன்படுத்த பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் தேவைப்  படுகின்றது" என்றார்.

இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச பொலீஸ் அத்தியட்சகர், குச்சவெளி-பதவி ஸ்ரீபுர பிரதேசசபை  தவிசாளர்கள்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்,சமயப்பிரமுகர்கள் மற்றும் பள்ளிவாசல் தலைவர் மார்களும்  கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் தெரிவித்தனர்.       

No comments

Powered by Blogger.