Header Ads



எலும்பு முறிவுக்கான விஷேட வைத்திய நிபுணரை நியமிக்கும்படி கோரிக்கை

(எம்.எம்.ஏ.ஸமட்)

கல்முனைப் பிரதேச அரச வைத்தியசாலைகளில் எலும்பு முறிவுக்கான விஷேட வைத்திய நிபுணர் இல்லாமையினால் நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

இது குறித்து கல்முனைப் பிரதேச மக்கள்  தெரிவிப்பதாவது,

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை மற்றும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திசாலை என்பவற்றில் மிக நீண்டகாலமாக எழும்பு முறிவுக்கான விஷேட வைத்திய நிபுணர் இல்லாமையினால் பெரும் சிரமத்தை நோயாளர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். 

இப்பிரதேசத்தில் அடிக்கடி இடம்பெறும் வீட்டு விபத்துக்கள் மற்றும் வீதி விபத்துக்களில் சிக்கி கை, கால் மற்றும் இதர உடலுறுப்புக்களில்  எலும்பு முறிவு ஏற்படும்போது அதற்கு உரிய சிகிச்சையை உரிய முறையில் வழங்குவதற்கு இவ்விரு வைத்தியசாலைகளிலும் எழும்பு முறிவு வைத்திய நிபுணர் இல்லை. 

வைத்திய நிர்ணரின் பணியினை சாதாரண வைத்தியர்களும் சத்திர சிகிச்கை வைத்தியருமே மேற்கொள்கின்றனர். இதனால் விபத்துக்குள்ளாகுவோர் தனியார் மருத்து மனைகளுக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. இருப்பினும் எல்லாத் தரப்பினராலும் பெரும் பணச்செலவு செய்து தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற முடியாது. 

இவற்றைக் கருத்தித்கொண்டு, இவ்விரு வைத்தியசாலைகளிலும் எழும்பு முறிவுக்கான விஷேட வைத்திய நிபுணரை நியமிக்க வைத்தியசாலை நிருவாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments

Powered by Blogger.