Header Ads



புத்தகயா தாக்குதலைச் சாட்டாக வைத்து இலங்கை முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்க இடமளியோம்!

(எம்.ஜே.எம். தாஜுதீன்)

இந்திய பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஒரு முஸ்லிம் அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதை சாட்டாக வைத்து இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள எடுக்கப்படும் முயற்சிகளை அரசு அனுமதிக்காதென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (11) தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்-

வேறு ஒரு நாட்டில் நடைபெறும் ஒரு சம்பவத்தை இலங்கையுடன் இணைத்து வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவதில் சில இணையத்தளங்கள் ஈடுபட்டுவருவது எமது கவனத்துக்கு கெண்டுவரப்பட்டது. அச்சம்பவத்தை வைத்துக்கொண்டு இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவிதமான நடவடிக்ககைளையும் மேற்கொள்ள அரசாங்கம் இடமளி்க்காது என்றும் கூறினார்.

1 comment:

  1. அட நீயும் ஐ.தே.க. யில் இருந்து வந்தவன் தானே அதனால் தான் 1983 ல் ஜே.ஆர் கூறியது போன்று மக்களை தூண்டப்பார்க்கிறாய்.

    ReplyDelete

Powered by Blogger.