தேர்தல் வெற்றிக்காக மாமா அஸ்மியை பயன்படுத்திவிட்டு, பின் கொன்றொழித்த அரசு
மாளிகாவத்தையில் வாழ்ந்த மாமஸ்மி அல்லது முஹம்மத் அஸ்மின் அவர்கள், விஷேட போலிஸ் அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணம் மத்திய கொழும்பை அரசாங்கத்தால் வெற்றிகொள்ள முடியாமல் போனதாகும்,
ஸ்ரீ லங்கா எக்ஸ் நியூஸ் இணையத்திற்காக ஊடகவியலாளர் சாந்த விஜேசூரிய அவர்களால் , இரகசிய இடமொன்றில் வைத்து பெறப்பட்ட விஷேட பேட்டியொன்றின் மூலம் , மத்திய கொழும்பை வெற்றிகொள்வதற்காக ராஜபக்சேக்கள் மேற்கொண்ட மனிதப படுகொலைகளை மேற்கொண்ட விதம் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட பேட்டி கீழ்வருமாறு அமைந்திருந்தது ..........
கேள்வி :- மாளிகாவத்தை போலீசார் மற்றும் ஊடகவியலாளர்கள் உங்களை பாதாள உலக கோஷ்டியினர் என்றே அழைக்கின்றனர் அது ஏன் . அதற்கான வரலாறை சொல்லலாமா?
பதில் :- நாங்கள் பாதாள உலகை சேர்ந்தவார்கள் அல்ல . எனது உடன் பிறந்த சகோதரர்கள் அனைவரும் விளையாட்டு வீரர்கள் .ஒரு நாளின் கூடுதலான நேரத்தை அவர்கள் விளையாட்டு மைதானத்திலேயே களிப்பார்கள் . நாங்கள் உதைப்பந்தாட்டம், கிரிகட் விளையாடுபவர்கள் . எங்கள் ஊரில் நாங்கள் நிம்மதியற்று வாழவேண்டிய சூழல் ஏற்பட்டது . அணைக்கட்டு அருகில் வாழ்ந்த சுதாவும் கிறிஸ்டோபரும் எனது மூத்த சகோதரர்களுக்கு தினமும் தொந்தரவு கொடுத்தார்கள் . அவர்கள் எமது ஊர்காரர்கள் அல்ல வெளியூர்காரர்கள். கிறிஸ்டோபர் நுவரெலியவை சேர்ந்தவர். சுதா எங்கிருந்து வந்தார் என்று எனக்கு தெரியாது,
கேள்வி :- அவர்கள் ஏன் உங்களுக்கு தொந்தரவு கொடுத்தார்கள் .
பதில் :- எங்கள் விளையாட்டு கழகத்தின் சார்பாக விளையாடுவதற்காக ,வெளியிலிருந்து விளையாட்டு வீரர்களை அழைத்து வரும் வழக்கம் கிறிஸ்டோபரிடமிருந்தது, எனது சகோக்தரர் அதற்கு விருப்பம் தெரிவிக்காது எதிர்த்தார் , இதை எதிர்த்த காரணத்தால் எனது சகோதரனுக்கும் ,பாஜி மற்றும் டொன் ஆகியோருக்கு அடிக்க வந்தார்கள். சுதாவால் ஏவப்பட்ட பணியை செய்து கொடுக்காத காரணத்தால் எங்களுடைய நகர சபை உறுப்பினர் இம்தியாஸ் அவர்களை வீதி நடுவில் வைத்து அடித்தார்கள் . அப்போது எனக்கு 16 வயதிருக்கும் . இந் நிகழ்வுக்கு பின் எனது சுதாவையும் கிறிச்டோபரையும் எமது ஊரிலிருந்து விரட்டி விட எனது சகோதரர்கள் தீர்மானம் எடுத்தார்கள். எமது ஊரை சண்டியர்களிடமிருந்து பாதுகாக்க எனது சகோதரர்களினால் எடுக்க பட்ட முயற்சியின் காரணமாக அவர்களை பாதாள உலக கோஷ்டியினர் என்று ஊடகங்களும் போலிசும் பிரச்சாரம் பண்ணஆரம்பித்தார்கள்.
கேள்வி :- 2007ல் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக நீங்கள் உழைத்தீர்களா ?
ஆம். 2007 மாகாண சபை தேர்தலில் நாங்கள் அரசாங்கதிட்கு வேலை செய்தோம் . இப்படித்தான் அது நடந்தது. நாமல் ராஜபக்ஸ அவர்களின் “தாருன்யட்ட ஹெடக்” ( நாளைய நாள் இளைஞர்களுக்காக ) என்ற அமைப்பிற்கு ஒரு கடிதம் எழுதினோம். அக்கடிதத்தில் நாங்கள் எண்களின் நிலைமைகளை விளக்கி , எங்களை “முஸ்லிம் பாதாள உலகம் என்று அழைக்கின்றார்கள் . நாங்கள் இந்த நிலைமையிலிருந்து மீள வேண்டும் . அதற்காக எங்களுக்கு உதவுங்கள்” என்று வேண்டியிருந்தோம். மாகாண சபை தேர்தலின் பின் “தாருன்யட்ட ஹெடக்” அமைப்பிலிருந்து எமக்கொரு பதில் கடிதம் வந்தது. அதில் அலரிமாளிகைக்கு வந்து தம்மை சந்திக்கும் படி வேண்டப்பட்டிருந்தது.
கேள்வி :- நாமல் ராஜபக்ஸவை சந்திக்க சென்றீர்களா?
பதில் :- பாயிஸ் சகோதரர் நாமல் ராஜபக்ஸவை சந்தித்திருந்தார்
கேள்வி :- பாயிஸ் சகோதரர் தற்போது உயிரோடு இருக்கின்றாரா?
பதில் :- இல்லை , அவரை வெள்ளை வேனில் கடத்திச் சென்றார்கள் , அவருக்கு என்ன நடந்தது என்று இதுவரைக்கும் எங்களுக்கு தெரியாது. அதன் பிறகு ஜனாதிபதியவர்களை சந்திக்கும் படி கடிதமொன்று வந்தது.
கேள்வி :- ஜனாதிபதியை சந்திக்க சென்றீர்களா ?
பதில் :- ஆம். அப்போது சகோதரன் பாஜி சிறையிலிருந்தார். அவரின் தம்பி பையா வெளிநாட்டிலிருந்தார் . பாயிஸ் சகோதரன் தான் ஜனாதிபதியை சந்திக்கச் சென்றார் நான் செல்ல வில்லை.
கேள்வி :- பாயிஸ் சகோதரரிடம் ஜனாதிபதி என்ன சொல்லியிருந்தார் ?
பதில் :- “போலிசால் உங்களுக்கு எந்த வித தொந்தரவும் வராமல் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழலை நான் ஏற்படுத்தி தருகின்றேன். நீங்கள் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியை வென்றுதர வேண்டும்” என்று பாயிஸ் சகோதரரிடம் வேண்டுதல் விடுத்துள்ள ஜனாதி பதி,. அம்ஜத் மௌஜுத் என்ற நபரொருவரையும் பாயிஸ் சகோதரரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
கேள்வி :- யுத்த காலத்தில் நீங்கள் பாதுகாப்பு பிரிவினருடன் அன்யோயமாக செய்லாற்றியுள்ளீர்களா?
பதில் :- ஏனில்லை ? போலிஸ் உத்தியியோகத்தர்களும் , ராணுவ அதிகாரிகளும் எங்களிடம் வந்து கூறுவார்கள் , “ உங்களின் ஊரை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என்று, அந்த காலங்களில் இரவு பகலாக நாங்கள் ஊரை பாதுகாத்தோம். அந்த நாட்களில் போலிஸ் எங்களுடன் சுமுகமான உறவை வைத்திருந்தது.
கேள்வி :- அதன் பிறகு அம்ஜாத் மௌஜூத் உங்களை வந்து சந்தித்தாரா ?
பதில் :- ஆம் , எங்கள் பிரச்சினைகளை கடிதங்களில் எழுதி தருமாறும் ஜனாதிபதியவர்களுக்கு நேரடியாக கையளிப்பதாகவும் கூறினார். நானும் எங்களது பிரச்சினைகளை எழுதி ஒரு கடிதம் கொடுத்தேன். பையாவின் அம்மாவும் ஒரு கடிதம் கொடுத்தார். பின்பொரு முறை அவரை சந்தித்த வேளை அந்த கடிதங்களை தாமே நேரடியாக ஜனாதிபதியிடம் கையகித்ததாக அம்ஜத் மௌஜூத் கூறினார்.
கேள்வி :- பாஜியை ஜாமீனில் வெளியில் கொண்டுவந்தது மாகாண சபை தேர்தல் காரணத்தாலா ?, அதற்காக மேலிடத்திலிருந்து உத்தரவுகள் ஏதும் பிரப்பிகப்பட்டதா.?
பதில் :- தேர்தல் காலத்தில் தான் பாஜீக்கு ஜாமீன் கிடைத்தது. அதற்கு அரசியல் தொடர்புகள் உண்டா இல்லையா என்பது பற்றி எனக்கு தெரியாது. பாஜியின் தம்பி பையா தேர்தல் வேலைகளுக்காகவே நாட்டுக்கு வந்தார்.
கேள்வி :-மாகாண சபை தேர்தலுடன் , 100 அடி நீளமான ஜனாதிபதியின் உருவ கட்டவுட் ஒன்றை மாளிகாவத்த சந்தியில் கட்டியிருந்தார்கள் அல்லவா?
பதில் :- ஆம் , அது எனது சகோதரரின் செலவால் தான் செய்யப்பட்டது. அவர்தான் அதை மாளிகாவத்தை சந்தியில் பூட்டியிருந்தார்.
கேள்வி :- நீங்கள் அரசாங்கத்தின் வெற்றிக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது, போலிசின் விஷேட அதிரடிப் படையோ , பாதாள உலக கட்டுபாட்டு பிரிவோ உங்கள் சகோதரர்களை தேடி வரவில்லையா ?
பதில் :- இல்லை , எந்தவொரு போலிஸ் படையணியும் எங்களை தேடி வரவில்லை , நாங்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடி, அரசாங்கத்தின் வெற்றிக்காக நேர்மையாக உழைத்தோம்.
கேள்வி ;- மாளிகாவத்தை சந்தியில் பூட்டப்பட்டிருந்த ஜனாதிபதியின் கடவுட் அருகிலிருந்த ரணில் விக்ரமசிங்க்ஹ அவர்களின் கடவுட்டை அகற்றியது நீங்கள் தானே.
பதில் :- ஆம் , நாங்கள் சொல்லித்தான் அதை கழட்ட வைத்தோம் . ஜனாதிபதியவர்கள் மாளிகாவத்தை சந்தியை கடந்து செல்லும் போது அதை கண்டுள்ளார். ஜனாதிபதியவர்களின் கடவுட் அருகிலிருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கடவுட்டை அகற்றிவிடும் படி ஜனாதிபதியவர்கள் சொன்னதாக மௌஜூத் அவர்கள் , எனது சகோதரர்களிடம் வந்து கூறியுள்ளார், அதற்கமைய நவ்பர் மந்திரிஇடம் இதுபற்றி கூறி ,” நீங்களும் இந்த ஊரை சேர்ந்தவர் ஆகையால் ஊருக்கு நல்லது நடக்குமென்றால் அதை அகற்றிவிடும்படி நாங்கள் நவ்பர் மந்திரியிடம் வேண்டினோம். அதன் பின் அவர் அந்த கட்டவுட்டை அகற்றி விட்டார். எங்களின் எதிர் கால தீர்வு இத்தேர்தலில் தங்கியிருந்ததால் நாங்கள் நவ்பர் மந்திரியிடம் சொல்லி இதை செய்வித்தோம்.
கேள்வி :- மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான தேர்தல் காரியாலயமாக பாஜியின் வீட்டை தானே பயன் படுத்தினார்கள். பாஜியின் முழு வீட்டையும் நீலநிரத்தால் அலங்கரித்திருந்தார்கள் அல்லவா.
பதில் :- ஆம்.
கேள்வி :- அரச பிரதி நிதிகளாக யார்யாரெல்லாம் பாஜி யின் வீட்டுக்கு வந்து போனார்கள்?
பதில் :- நிறைய பேர் வந்தார்கள், மேர்வின் சில்வா வந்தார். பிக்குகள் வந்தார்கள்,, டிபெண்டர் வாகனங்களில் , வந்து போன அமைச்சர்கள் யார் என்பது பற்றி எனக்கு தெரியாது. பாஜி நானா தான் அவர்கள் பற்றி அறிவார் .
கேள்வி :- மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியை வென்று தருமாறு உங்களுக்கு ஆயுதங்கள் வழங்கப் பட்டதா?
பதில் :- நானறிந்த வகையில் எந்தவொரு ஆயுதமும் வழங்கப் படவில்லை ,ஆனால் தேர்தலை வெற்றியடையச் செய்தால் சுதந்திரமாக வாழ்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாக சொல்லியிருந்தார்கள்.
கேள்வி :- தேர்தலை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்ததா ?
பதில் :- ஆம் , எங்களுக்கு திடமான நம்பிக்கையிருந்தது.
கேள்வி ;- மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் அரசாங்கம் தோல்விகண்டது, மௌஜூத் மாகாண சபைக்கு தெரிவாகவும் இல்லை . அதன் பிறகு என்ன நடந்தது.
பதில் :- அதன் பிறகு மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டி ஏட்பட்டது. அரசாங்கம் தோல்வியடைந்ததும் நாங்கள் மீண்டும் கொள்ளை காரர்களாகவும் , பாதாள உலக கோஷ்டியினராகவும் சித்தரிக்கப் பட்டோம்.
கேள்வி :- எவ்வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தீர்கள் .
பதில் :- மாளிகாவத்த பள்ளிவாயிளுக்கு அருகில் வைத்து ஆனமாலு இம்தியாஸ் பாஜியை நோக்கி சுட்டார் , அதன் பிறகு போலிசால் பல சிக்கல்கள் எங்களுக்கு வந்தது. எனது சகோதரர்களை போலிஸ் விஷேட அதிரடி பிரிவால் சுட்டுக் கொல்லப் படவிருப்பதாக அறியக்கிடைத்தது. அந்த நாட்களில் எனது வியாபார நடவடிக்கைகளும் வீழ்ச்சியுற்றிருந்தது. நான் கடனாளியாக இருந்தேன் , பிறகு நான் வெளிநாடு சென்றேன், அந்த நாட்களில் தான் “ஆமி சம்பா ” என்றொரு வாலிபரை மாளிகாவத்த போலிஸ் நிலையத்தால் கைது செய்தார்கள். நான் பாங்கொக்கில் இருந்து மாளிகாவத போலிஸ் நிலைய அதிகாரியொருவருக்கு தொலை பேசியூடாக தொடர்புகொண்டு கதைத்தேன் , அவர் புலன் விசாரணை பிரிவில் கடமைபுரிம் நானறிந்த அதிகாரியாவார். கைது செய்யப்பட்டிருக்கும் “ஆமி சாப்பா” ஒரு அப்பாவி என்றும் அவரை விடுதலை செய்யும் படியும் வேண்டினேன். அப்போது அவர் கூறினார், “ நாளை அவரை போலிஸ் தடுப்புக்காவலில் வைப்பதாகவும் தம்மையும்
அவதானித்துக் கொள்ளும்” படியும் வேண்டினார், அதற்கமைய அவருக்கும் இன்னுமொரு எஸ் ஐ ஒருவருக்கும் கொடுக்கும் படி ஐம்பதாயிரம் ரூபா பணத்தை ஒரு நண்பர்மூலம் கொடுத்தனுப்பினேன். அடுத்த நாள் அவரை கொன்று விட்டதாக கேள்வி பட்டேன் . கடைசியில் ஆமி சம்ப்பாவும் இல்லை ஐம்பதாயிறம் ரூபா பணமும் இல்லை என்ற நிலை எனக்கு ஏற்பட்டது . நான் மிகவும் துயரப்பட்டேன், கவலையடைந்தேன். பிறகு அந்த போலிஸ் அதிகாரிகளுக்குன் நான் தொலை பேசியூடாக தொடர்பு கொண்டாலும் அவர்கள் பதிலளிக்கவில்லை. அதன் பிறகு தேர்தல் அலுவலகத்தில் சேவை செய்த ஒரு இளைஞரையும் வெள்ளை வேன் ஒன்றில் கடத்திச் சென்றுள்ளார்கள் , இன்றுவரை அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாது. எனது சகோதரன் பாயிஸ்சையும் கடத்திச் சென்றுள்ளார்கள்.
கேள்வி :- உங்கள் சகோதரன் பாயிஸ்ஐ ஜனாதிபதியவர்களுக்கு அறிமுகப் படுத்தியவர் யார் ?
பதில் :- அது பற்றி எனக்கு தெரியாது , ஜனாதிபதியவர்களிடம் அழைத்து சென்றவர்கள் பற்றியும் வாக்குறுதியளித்தவர்கள் பற்றியும் பாயிஸ் நானா மட்டுமே அறிந்திருந்தார்.
கேள்வி :- நாட்டை வென்ற , அதேவேளை யுத்தமொன்றை வென்ற ஜனாதிபதி மத்திய கொழும்பை வெற்றிகொள்ள ஏன் பாஜியிடம் மண்டியிட வேண்டும் .
பதில் :- நாங்கள் மத்திய கொழும்பை வெற்றி பெறச் செய்வோம் என்று ஜனாதிபதி நம்பியிருந்தார், அனால் வெற்றி பெற முடியாமல் போனதும் நாங்கள் மீண்டும் குற்றவாளிகளானோம், அதன் பிறகு தான் ஜனாதிபதியுடன் தொடர்புகளை மேட்கொண்டிருந்த பாயிஸ் நானாவை வெள்ளை வேனில் கடத்திச் சென்றார்கள், பாஜி நானா அவரது இரண்டாவது மனைவியின் வீட்டிலிருந்த வேளை விஷேட அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப் படுகின்றார் , பாஜிநானவுடன் சேர்ந்து இன்னும் மூன்று அப்பாவிகள் சுட்டுக்கொல்லப் பட்டார்கள், அத்துடன் பொலிசாரால் கை குண்டுகளையும் ஆயுதங்களையும் அங்கே அவ்விடத்தில் போட்டார்கள் .
கேள்வி :- ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த பாயிஸ் நானாவை கடத்திச் செல்ல வேண்டிய தேவை என்ன. ?
பதில் :- அரசாங்கத்தின் பாதுகாப்பு படையினரால் எமக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டவேளை , “ஜனாதிபதி எங்களை ஏமாற்றினார் எனக்கூறி” பாயிஸ் நானா பல இடங்களுக்கும் கடிதங்களை எழுதினார், அதன் பிறகுதான் அவர் கடத்தப்பட்டார் , இன்று வரை அவரை காணவில்லை. அதன் பிறகு அப்துல் என்றொரு வாலிபரை கடத்திச் சென்றார்கள் .அவரையும் இன்றுவரை காணவில்லை.
கேள்வி :- பொதுத்தேர்தலில் நீங்கள் யாருக்காக வேலை செய்தீர்கள் ?
பதில் :- அமைச்சர் பௌசி அவர்களுக்கே நான் வேலை செய்தேன் . துமிந்த சில்வாவுக்கும், அசாத் சாலிஹ்கும் மஞ்சள் அகரம் வேலை செய்தார் . எங்கள் பிரச்சினைகளை தீர்த்து தருவதாக துமிந்த சில்வா வாக்குறுதியளித்திருந்தார் ஆகவே அகரம் அவர்களுக்காக வேலை செய்தார். தேர்தலின் பின் நுவரெலியாவில் வைத்து போலிஸ் சீருடையணிந்த குழுவொன்றின் மூலம் அக்ரம் அவரின் மனைவியின் முன்னாலேயே கடத்தப்பட்டார்.
கேள்வி :- பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் வியாபாரம் செய்தாரா ?
பதில் :- நான் துமிந்த சில்வா அவர்களுடன் நெருக்கமாக பழகியதில்லை . அக்ரமுக்கு அவருடன் நெருங்கிய தொடர்பிருந்தது.
கேள்வி :- தூள் வியாபாரம் செய்யும் செய்யும் அமைச்சர்கள் பற்றி தெரியுமா ?
பதில் :- நான் தூள வியாபாரம் செய்யாததால் அவர்கள் பற்றிய விபரம் எனக்கு தெரியாது. ஆனால் அமைச்சர்களின் ஆதரவு இல்லாமல் இலங்கைக்கு தூள் இறக்குமதி செய்யவும் முடியாது தூள் வியாபாரம் செய்யவும் முடியாது. இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு தூள் கொண்டுவரப்படுகின்றது.
கேள்வி :- நீங்கள் உதைப்பந்தாட்டம் விளையாடுவதாக தெரிவித்தீர்கள் , தேசிய மட்டத்திலான போட்டிகளில் பங்கு பற்றியுள்ளீர்களா ?
பதில் :- இந்தியாவின் மாநில அணிகளுடகளுக்கு எதிராக விளையாடியுள்ளேன்.
ஐயுப் கான் பாஜி ஆகியோரும் உதைபந்தாட்ட வீரர்கள்.
கேள்வி :- எதிர்காலத்தில் நீங்கள் அரசியலில் ஈடுபடும் எண்ணம் உள்ளதா ?
பதில் :- இல்லை அக்ரம் கடத்தப் பட்டதற்கு பின் எந்த ஒரு அரசியல்வாதியின் பின்னாலும் செல்ல வில்லை .
கேள்வி :- உங்களை தேடி தந்தால் பத்துலட்ச ருபாய் சன்மானம் தருவதாக போலிஸ் மாஅதிபரின் கையொப்பத்துடன் பத்திரிகை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதே அது ஏன்.
பதில் :- அதுதான் எனக்குமுள்ள பிரச்சினை . கொழும்பு மாநகர தேர்தலில் நான் எமது கிரிகட் சங்க தலைவர் அஸ்வருக்காகக வேலை செய்தேன் . அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பிலேயே போட்டியிட்டார். அதற்கிடையில் மஹ்ரூப் அவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆளும் கட்சியில் சேர்ந்தார். அதன்பிறகு தாம் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடுவதாகவும் ஆகவே தனக்கு ஆதரவளிக்குமாறும் தொலைபேசியினூடாக என்னிடம் வேண்டுதல் விடுத்தார். நான் அதற்கு ஒத்துக்கொண்டேன் . அதன் பின் அவர் தன்னை நேரில் சந்திக்கும் படி கூறினார். ஆனால் பிறகு நான் அவரிடம் செல்லவில்லை . தேர்தலுக்குப்பின் சுமார் 1500 போலிஸ் விஷேட அதிரடி பிரிவினர் என்னை தேடியுள்ளனர். அவர்கள் என்னுடைய வீட்டுக்கு சென்று எனது மாமாவையும் இன்னுமொரு வாலிபனையும் கைது செய்து அடித்து துன்புறுத்தி பின் பொய் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். அதன்பிறகு எனது தம்பி முஹமது ரசூலை மாளிகாவத்த பொலிசாரால் கைது செய்துள்ளார்கள் . அரசியல் வாதிகளின் உதவிகள் இல்லாததால் நான் மனித உரிமை ஆணையகத்திற்கு சென்று முறையிட்டேன் . அதற்காக வழக்கறிஞர் ஒருவரின் உதவியையும் பெற்றுகொண்டேன் . தம்பியை ௦7 நாட்கள் தடுத்து வைத்திருந்து பிறகு ரிமாண்ட் செய்தார்கள்.
கேள்வி :- ஐக்கிய தேசியக் கட்சியினூடாக கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்ட அபேட்சகர்களான நவ்பர் , மற்றும் பாசித் ஆகியோரை அரசாங்கத்தின் பக்கத்திற்கு எடுத்துத் தருமாறு மஹ்ரூப் அவர்கள் உங்களிடம் வேண்டுதல் விடுத்தாரா ?
பதில் :- ஆம்,, எனது தம்பி போலிஸ் தடுப்பு காவலில் இருக்கும் போது கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ரிசா சரூக் என்னை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நவ்பரை அரசாங்க பக்கத்திற்கு பெற்றுத்தருமாறு வேண்டிக் கொண்டதுடன், எனது எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து தருவதாகவும் , எனது தம்பியையும் மீட்டுதருவதாகவும் அவர் கூறினார். ரிசா சரூக் என்னுடன் பேசியது ௦6 ந் திகதி, மாநகர சபை உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் எடுக்கவிருந்தது ௦8 ந்திகதியாகும், ஆகவே நான் அவர்களிடம் கூறியது இது போன்ற விடயங்களை ஒரு நாளில் செய்ய முடியாது என்று. அதன் பின் அவர், “அவசரப் பட தேவையில்லை நன்றாக யோசித்து முடிவை சொல்லுமாறு” கூறினார். அதன் பிறகு இதுபற்றி நாம் பேசிக்கொள்ள வில்லை.
பின்னொரு நாள் மஹ்ரூப் அவர்கள் எனது தொலைபேசிக்கு தொடர்பை ஏற்படுத்தி, “ நவ்பர் மற்றும் பாஸித் ஆகியோரை அரசாங்கத்தின் பக்கத்திற்கு எடுத்து தந்தால் ஆகப்பெரிய இடத்துக்கு என்னை அழைத்துச் சென்று எனது எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து தருவதாக” கூறினார். அப்போது நான் மஹ்ரூப் அவரிகளிடம் கேட்டேன் ஆகப்பெரிய இடம் என்றால் யார் என்று. அப்போது அவர், “பாதுகாப்பு செயலாளர் தான் ஆகப் பெரிய இடம்” என்று கூறினார் , அத்துடன் எனது மனைவியை அல்லது தாயை பாதுகாப்பு செயலாளரிடம் அழைத்துச் சென்று எனது பிரச்சினைகளை தீர்த்து தருவதாகவும் சொன்னார்.
அதன் பிறகு, தற்போதைக்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது , நவ்பர் தற்போது உங்களிடம் தானே உள்ளார் அவரிடம் கதைத்து பார்த்து ஏதாவது செய்யப் பாருங்கள் .என்று நான் மஹ்ரூப் அவர்களுக்கு தெரிவித்துவிட்டேன். அந்த நிகழ்விற்கு சுமார் ஒருவார காலத்திற்கு பின்பு எனது தம்பியையும் சுட்டு கொன்றுள்ளார்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்தது. அதை எனது எதிரிகள் செய்ததாகவே போலிஸ் மூலமாக எனக்கு தகவல் கிடைத்தது.
கேள்வி :- மஹ்ரூப் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்காத காரத்தினால் உங்கள் தம்பியை சுட்டுக் கொன்றார்கள் என்று கூறுகின்றீர்களா.?
பதில் :- ஆம் . வேறு காரணங்கள் இல்லை. எனது தம்பி ஒரு மரக்கறி வியாபாரி. எனது எதிரிகள் என்னை கொல்வார்களே ஒழிய எனது தம்பியை ஏன் கொல்ல வேண்டும்.? மஹ்ரூப் அவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து, பாதுகாப்பு அமைச்சின் பலத்தை எங்களுக்கு காட்டுகின்றார். இந் நாட்டில் எத்தனை பேர் தூள் வியாபாரம் செய்பவர்களும், அநியாயக்காரர்களும் உள்ளார்கள்?. என்னை மாத்திரம் தொலைகாட்சியில் காட்டி , என்னை பிடித்து தந்தால் பத்துலட்சம் தருவதாக சொல்கிறார்கள்.
கேள்வி :- நீங்கள் குற்றமற்றவர் என்றால், ஏன் வெளியில் வந்து உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியாது. ?
பதில் :- யாரிடம் உண்மையை சொல்வது ??, நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ளவர்களை கூட கடத்திச் செல்கிறார்கள் . நான் நீதி மன்றத்தில் ஆஜரானால் எனக்கும் தெமட்டகொட மேர்வினுக்கு ஆனகதி தான் ஆகும். அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரிவே இன்று ஆள்கடத்தலில் ஈடுபட்டுள்ளது. தூள் வியாபாரிகள் பாதாள உலக கோஷ்டியினர் மாத்திரமல்ல அரசியல் வாதிகளையும் கடத்திச் செல்கிறார்கள் . நான் உண்மையை சொல்ல வெளியில் வந்தால் என்னையும் கொன்று விடுவார்கள். நீதி மன்றங்களாயினும் எனது உயிருக்கு உத்தரவாதமளிக்க முன்வர மாட்டாது.
சுட்டுக் கொல்லப்பட்ட மாமாஆஸ்மியின் பிரேத உடல் எஸ் டி எப் கெப் வண்டியினுள் கொழுபம்பு பண்டார நாயக சர்வதேச கேட்போர் கூடதிட்கருகே போலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மாமாஸ்மி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இலங்கை போலிசின் உத்தியோக பூர்வஅறிக்கையில் அவரது கொலை சம்பதமாக தெரிவிக்கப் பட்டிருப்பதாவது,
“ சந்தேக நபரை கைது செய்து ஜீப் வண்டியில் ஏற்றிகொண்டு செல்லும் போது ,அவர் வண்டியோட்டுனரின் கழுத்தை நெரிக்க முயற்சி செய்த வேளையில் வண்டியின் பின்பக்க ஆசனத்தில் அமர்ந்திருந்த விஷேட அதிரடிப்படை வீரரொருவரால் செய்யப் பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது சந்தேக நபர் கொல்லப்பட்டுள்ளார்.” -இலங்கை போலிஸ்- .

இவர்களின் பேட்டிகளை ஏன் வெளியிடுகிறீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை,இவரின் பேட்டி இவர் ஒரு ஆகாதவர் என்பது புரிகிறது,அத்துடன் ஒரு முக்கியமானவர் என்று தற்போது கருதப்படும் நபரான அஸாத் ஸாலி பற்றிய ஒரு குறிப்பு தௌவான உண்மையை வெளிப்படுத்துகிறது,சிந்திப்பவர்களுக்கு பதில் கிடைக்கும்,சிந்திப்பவர்கள் அஸாத் ஸாலியையும் மற்றும் அரசியலில் இருக்கும் 90 வீதமானவர்களையும் புறக்கனிப்பர்.
ReplyDeletewhen the pakse family will destroy by allah
ReplyDelete