'மஹிந்த ராஜபக்ஸ உத்தரவிட்டால் மஹியங்கனை பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்படும்'
மஹியங்கனை பள்ளிவாசலை மூடுமாறு உத்தரவிட்டவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத் கொடுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போன்ற அதிகாரமிக்கவர்கள் பள்ளவாசலை திறக்குமாறு உத்தரவிட்டால் மாத்திரமே மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை மீண்டும் திறக்க முடியுமென அப்பள்ளிவாசல் தலைவர் சீனி மொஹம்மது ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஆத்திரப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை மேற்கொள்வதைவிட நிதானமாக முடிவுகள் எட்டப்படுவதையே நாங்கள் விரும்புகிறோம். தற்போதும் பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது. பள்ளிவாசல் எப்போது திறக்கப்படும் என்பது எமக்கு தெரியாது.
பள்ளிவாசலை மூடிவிடுமாறும், அங்கு தொழுகை நடாத்தக்கூடாதெனவும் எமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதன்படியே நாம் பள்ளிவாசலை மூடியுள்ளோம். பள்ளிவாசலை மீண்டும் திறக்க வேண்டுமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போன்ற அதிகாரமிக்கவர்கள் அதற்கு உத்தரவிட வேண்டும். பள்ளிவாலை மூடச்சொன்னவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத் கொடுக்கவேண்டும். அப்போதுதான் பள்ளிவாசலை மீண்டும் திறக்க கூடியதாக இருக்கும் எனவும் பள்ளிவாசல் தலைவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தொலைபேசி மூலமாக கூறினார்.

அனைத்து முஸ்லிம் எம்.பி. மார்கள், அரை மந்திரிமார், முழு மந்திரிமார்களையும் முஸ்லிம் சமூகம் தூக்கி எறிந்து விட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மேல் நம்பிக்கை வைத்து அவரின் தலைமையில் அரசியலில் ஒன்றிணைந்து செல்ல இதுவொரு அரிய சந்தர்ப்பம்.
ReplyDeleteஎங்கே.. ஜனாதிபதியவர்கள் வாய் திறந்து ஆணையிடுவாரா....??
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
insha.alla nangal edhir farkkinrom
ReplyDeleteIs there any power to jammiyathul ulama to talk to president.If not we have to find a leader soon as possible.,
ReplyDeleteபள்ளிவாசலை மூடச்சொன்னவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை கொடுப்பதற்க்கு முதல் நமது அரசியல் வாதிகளுக்கு ஹிதாயத் இருக்கா என்று பாருங்கள் . நமது தலைவர்கள் யாரை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று பாருங்கள் இப்படியனவர்களுக்கு யார் துணை .
ReplyDeleteபள்ளியை மூடச் சொன்னவனே எப்படி அதை திறக்கச் சொல்வான்?
ReplyDeleteயா அல்லாஹு உனது உம்மததையும் உனது புனிதா பள்ளிஹளையும் அவமானப் படுத்தும் இண்ட காபிர்ஹளுக்கு நீ ஹிதயத்தை குடுப்பயஹா.....
யா அல்லாஹு, இவர்ஹளுக்கு ஹிதாயத் இல்லை என்றால் இண்ட கூட்டத்தை அடியோடு அளித்து விடுவயஹா.....அவர்ஹளை இம்மை மறுமை இரண்டு உலஹிலும் இழிவு படுட்டுவயஹா.....இவர்ஹளுக்கு பின்னால் உள்ள அதிஹாரிஹளை அளித்து நாசமாக்கி விடுவயஹா.......புனிதா ஹரம் சரீபை அளிக்க வந்த யானை படையை சிறு பறவை கூட்டத்தை கொண்டு அளித்து ஒழித்த நாயனே உனது மாளிஹையை அசிங்கப் படுத்தும் இக் கூட்டத்தை நாசமாக்கி விடு.....புனித ரமலான் நோன்போடு இண்ட துஅ கேட்கிறோம் யா அல்லாஹ் இதை அன்கிஹரிட்டு இஸ்லாத்தை அளிக்க வேளிக்கிட்டுள்ள பிக்கு கூட்டத்தை நீ சீரழித்து விடு...அவர்ஹளுக்கு தீராத நோய்ஹளை குடுப்பயஹா....அவர்ஹல் செல்லும் இடம் எல்லாம் அவர்ஹளுக்கு இல்லை கொடு யா அல்லாஹு....
”ஓங்காப்பா ஓங்காப்பா...நம்முட சனாதிபதியும், அவர்ர ஒறவுகளும் ”எல்லாத்துக்கும்” நம்மளுக்கு வழிகாட்டுவாங்காப்பா!.” ஊருல ஒலகத்துல முஸுலிம் சமுகங்களுக்கு என்னன்ன சதிமானங்களெல்லாம் எப்பெயில இருந்து நடந்துவருகுதெண்டும்,. இதுகளுக்கெல்லாம் முன்னாலயும் பின்னாலயும் ஆராரெல்லாம் இரிக்காங்க,... இரிந்திரிக்காங்க,... இனிமேல இரிப்பாங்க எங்கிற சரித்திரத்தயும் கொஞ்சம் திரிம்பி கவனமாப்பாருங்காப்பா!!. இதுல; நம்முட உள்ளூரு நடிகனுகளுக்கு (அரசியல்வாதிகள்), சனாதிபதி(டைரெக்டரு),என்னன்ன பாத்திரத்த குடுத்து, எப்புடியெல்லாம் நடிப்புச்சொல்லிக்குடுக்காரோ அப்படி நடிக்கிறதுதான் இவியல்ல தொளிலுவாப்பா!!. இப்ப சிலோனில ஓடித்தூள்கெளப்பிக்கிட்டிரிக்கிற பொதுப்பலசேனா என்கிற படத்திர கதயும் தயாரிப்பும் உள்ளூர் காறனுகள்ள இல்ல என்கிறது புத்திக்கிபுரியிது ஆனா, மனசுக்கு வெழங்குதில்ல எலுவா வாப்பா றஹ்மதுழ்ழாஹ்!!! ஒங்களத்தான் கிளி!!!!
ReplyDelete