"ஹிரா" வின் மாணவர்கள் கௌரவிப்பு
"ஹிரா மீள் எழுச்சி கல்வி மையம் " தனது இரண்டாவது வருட நிறைவை முன்னிட்டு அண்மையில் பல முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாக ஒரு விழாவை தில்லையடி முஸ்லிம் மகா வித்யாலய கேட்போர் கூடத்தில் நிகழ்த்தியது.
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட "ஹிரா" வின் " புஷ்ரா " தஜ்வீத் மத்ரஸா மாணவர்களுக்கு தஜ்வீத் குர்ஆன் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.
கலாபூஷணம் யாழ் அஸீம் மண்ணில் வேரோடிய மனசோடு எனும் கவிதைத் தொகுப்பு மீள் வெளியீடும் இதன்போது நடைபெற்றது.
9 A பெற்ற மாணவர்களால் ரமழானின் சிறப்பு மற்றும் கல்வியின் முக்கியத்துவம் பற்றி உரைகள் நிகழ்த்தப்பட்டன,
பிரதம விருந்தினராக இளைப்பாறிய பிரதிக்கல்விப் பணிப்பாளர் M A R அப்துல் ரஹீம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக புத்தளம் தமிழ் வலைய உதவிக் கல்விப் பணிப்பாளர் Z A சன்ஹிர், அஷ் ஷெய்க் A அப்துல் நசார் தலைவர், ஆன்மீக ஒருமைப்பாட்டு மையம், மற்றும் யாழ் பிரதி மேயர் M M ரமீஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் மேலும் பிரதம விருந்தினர் இளைப்பாறிய பிரதிக்கல்விப் பணிப்பாளர் M A R அப்துல் ரஹீம் அவர்களும் சிறப்பு விருந்தினர், புத்தளம் தமிழ் வலைய உதவிக் கல்விப் பணிப்பாளர் Z A சன்ஹிர் அவர்களும் ஹிராவின் தலைவரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டார்கள்.







The main event of this program has been omitted here. That is the felicitation of those students who passed GCE O/L 2012 with merits. All were given certificates & mementoes. Those four who got 9 A's were presented with special shields. 3 students are from p/Thillaiyady/MMV. & one from P/Palavi/MMV. All these were done to encourage the students to do well In there future studies and to promote and educated society.Alhamdulillah
ReplyDelete/
இந்த நிகழ்வில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் இந்த ரமழான் மாதத்தில் அருள் புரிவானாக......... மேலும் இவர்களது பணி தொடர இறைவனை பிரார்த்திக்கிறோம்....... ஆமீன்.........
ReplyDelete