துருக்கி பிரதமருக்கு அளித்த கவுரவ டாக்டர் பட்டத்தை திரும்ப பெறுகின்றது சிரியா பல்கலைக்கழகம்
துருக்கியின் பிரதமரான ரெசெப் டயிப் எர்டோகனுக்கு சிரியாவின் அலெப்போ பலகலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளித்திருந்தது. ஆயினும் அவர் தற்போது சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுக் கலவரத்தில் அரசை எதிர்த்துப் போரிடும் புரட்சியாளர்களை ஆதரித்து வருகின்றார். மேலும், துருக்கியின் போராளிகளை ஒடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றார். இதனால் அவரது கவுரவ பட்டம் திரும்பப் பெறப்படுவதாக சிரியா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.
பிரதமர் எர்டோகனின் விரோதக் கொள்கைகளை எதிர்க்கும் துருக்கி மக்களின் ஒற்றுமைக்கான செய்தியாக இதனைத் தெரிவிப்பதாக
அலெப்போ பல்கலைக்கழகத்தின் தலைவர் குதூர் ஒர்ப்லை கூறியுள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம், சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிரான போராட்டம் ஆரம்பித்தது முதலே துருக்கிக்கும், சிரியாவிற்கும் இடையிலான உறவுகள் சிதைய ஆரம்பித்தன. துருக்கி அதிபர் எர்டோகன், சிரியாவின் அதிபர் ஆசாத்தின் நடவடிக்கைகளை நேரடியாக விமர்சித்தார்.
துருக்கி இப்போது 4 லட்சும் சிரிய மக்களுக்கும், சிரியாவின் பல ராணுவத் தலைவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அடைக்கலம் அளித்துள்ளது. சிரியாவின் அரசு ஊடகங்களும் அதிபர் ஆசாத்திற்கு எதிரான எந்த பிரபல இயக்கத்தையும் ஒப்புக்கொள்வதில்லை. அவற்றை வெளிநாட்டு ஆதரவு பயங்கரவாதிகள் என்றே சித்தரிக்கின்றன.
.jpg)
Post a Comment