எகிப்து நாட்டின் இடைக்கால பிரதமராக ஹசம் எல்-பெப்லாவி நியமனம்
எகிப்து நாட்டில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரியாக இருந்த, ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக, 2011ம் ஆண்டு, மிகப் பெரிய மக்கள் புரட்சி ஏற்பட்டது. இதையடுத்து, முபாரக் பதவி விலகினார்; எதிர்க்கட்சியைச் சேர்ந்த, முகமது முர்சி, அதிபராக பொறுப்பேற்றார். முகமது முர்சி பதவி ஏற்று ஓராண்டாகியும், நாட்டின் நிலை சீரடையாததால், மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வாரம், ராணுவப் புரட்சி மூலம், அதிபர் பதவியிலிருந்து முர்சி தூக்கி எறியப்பட்டார்.
புதிய அதிபராக, "மாஜி' தலைமை நீதிபதி, மன்சூர் பொறுப்பேற்றுள்ளார். இதற்கிடையே புதிய பிரதமராக ஹசம் எல்-பெப்லாவி, 70, அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், எகிப்தின் முந்தைய இடைக்கால அரசின் போது, நிதி அமைச்சராக இருந்தார்.
Post a Comment