Header Ads



பௌத்த பிக்குகள் அட்டகாசம் - கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் மூடப்பட்டது

கிரண்ட்பாஸ் - சுவர்ணசைக்கி மாவத்தையில் இன்று வியாழக்கிழமை,அஸர் தொழுகையின் பின்னர் திறக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு எதிராக பௌத்த பிக்குகள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அப்பள்ளிவாசல் தற்போது மூடப்பட்டுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.

தற்போது கிரண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் இதுபற்றிய முக்கிய கூட்டமொன்று நடைபெறுவதாகவும், மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் அதில் பங்கேற்றிருப்பதாகவும் அறியவருகிறது. அத்துடன் இதுதொடர்பில் கொழும்புக்கு பொறுப்பான சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பைசர் முஸ்தபாவின் கவனத்திற்கும் முஸ்லிம் கவுன்சில் கொண்டு சென்றுள்ளது.

இதேவேளை குறித்த பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் அரச மரம் ஒன்று இருந்துள்ளது. இதனால் அந்த பள்ளிவாசலுக்கு எதிராக பௌத்தசிங்கள பேரினவாதிகள் நெருக்குவாரங்களை ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து குறித்த பள்ளிவாசல் சற்றுதள்ளி அமைக்கப்பட்டு மிண்டும் திறக்கப்பட்ட நிலையிலேயே பௌத்த பிக்குகள் மேற்கொண்ட எதிர்ப்பு காரணமாக அந்தப் பள்ளிவாசல் தற்போது மூடப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

1 comment:

  1. ungalukku oru alave illaiyada. allavattaiyum allah oruven parththukkonduthan irukkan.[allahu akbar ]

    ReplyDelete

Powered by Blogger.