Header Ads



கல்முனையை யாரும் இனரீதியாக கூறு போட முடியாது - ரன்முதுகல சங்கரத்ன தேரர்

(யு.எம் .இஸ்ஹாக்)

கல்முனையை  யாரும் இனரீதியாக கூறு போட முடியாது  இங்கு மூவின மக்களும் வாழுகின்றனர் .இன ரீதியாக நிருவாகத்தை பிரிக்க முற்பட்டால் அது பாரிய விளைவை ஏற்படுத்தும் என  கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராமய விகாரயின் விகாராதிபதி  ரன்முதுகல  சங்கரத்ன தேரர்  தெரிவித்தார் .

இன்று(13) மாலை கல்முனை தமிழ் பிரதேசத்துக்கான சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம்  கல்முனை உதவி பொலிஸ்  அத்தியட்சகர் காமினி தென்னகோன்  தலைமையில்  கல்முனை இராம கிருஷ்ண  மகாவித்தியாலயத்தில் நடை பெற்ற பொது  அங்கு கலந்து கொண்டு உரையாற்றி விட்டு  ஜப்னா முஸ்லிம் இனைய தளத்துக்கு விசேட செவ்வியொன்றை வழங்கும் போதே  மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார் .

கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராமய  விகாரயின் விகாராதிபதி  சங்கைக்குரிய ரன்முதுகல  சங்கரத்ன தேரர்  மேலும் அங்கு கருது தெரிவிக்கையில்  கல்முனையில் பிரதேச செயலகம்  ஒ ன்று இயங்குகின்றது  அது  தனியாக முஸ்லிம்களுக்கோ அல்லது சிங்களவர்களுக்கோ அல்லது தமிழர்களுக்கோ உரியதல்ல .கல்முனையில் வாழுகின்ற அனைத்து  இனத்தவர்க்ளுக்குமானது.

தமிழர்கள்  தங்களுக்கென தனியான பிரதேச செயலக  கோரிக்கையை கல்முனையில்  முன் வைத்தால்  அங்கு வாழும்  குறுகிய சிங்களவர்களுக்கும் தனியான பிரதேச செயலகம்  தேவை  என்பது வலியுறுத்தப் படும் .

கடந்த வாரம் கல்முனை பிற தேச செயலகத்துக்கு வருகை தந்த பொது நிருவாக அமைச்சர்  தெளிவாக தெரிவித்தார்  இனரீதியாக் நிருவாகத்தை பிரிக்க  மகிந்த அரசாங்கம்  ஒருபோதும்  துணை போகாது. கல்முனை தமிழ்,முஸ்லிம் ,சாய்ந்தமருது  மக்களுக்கென ஒரு பிற தேச செயலகத்தை ஸ்தாபித்து  பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை பிரதேச செயலாளராக்கி  மேலும் உதவி பிரதேச செயலாளர்களை  நியமிப்பதற்கே  அரசு நடவடிக்கை எடுக்கின்றது. என அமைச்சர் தெரிவித்ததாக கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராமய  விகாரயின் விகாராதிபதி  சங்கைக்குரிய ரன்முதுகள சங்கரத்ன தேரர் மேலும் தெரிவித்தார் .

இந்த உண்மை நிலையை நான் சொல்ல வினைகின்ற பொது  எனக்கும் இனவாத சாயம் பூசுகின்றனர் . நான் அரசியல் வாதியல்ல  நான் ஒரு சமய தலைவர் யதார்த்தத்தை சொல்ல வேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது.  இந்த நாடு ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமல்ல அனைவருக்கும் சொந்தமானது  இந்த நாட்டை இனரீதியாக்  பிரித்து  பங்கு போட முடியாது. என அவர் தெரிவித்தார்.


2 comments:

  1. it is true and we should not think separately. think as whole.

    ReplyDelete
  2. tell this to ur bodu bala sena leaders and their members

    ReplyDelete

Powered by Blogger.