Header Ads



முர்ஸி மீது குற்றவிசாரணை - விடுவிக்க கோருகிறது அமெரிக்கா

எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது மோர்சியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து ராணுவம் கடந்த 3-ம் தேதி ஆட்சியை கைப்பற்றியது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ராணுவம் மோர்சியை கைது செய்து ரகசிய இடத்தில் சிறை வைத்துள்ளது. 

இந்நிலையில் அவர் மீது குற்ற விசாரணை நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. உளவு வேலையில் ஈடுபட்டது, வன்முறையைத் தூண்டியது, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது போன்ற பல புகார்கள் அவர் மீது எழுந்துள்ளன. மேலும், முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியின் 8 முக்கிய தலைவர்கள் மீதும் புகார்கள் எழுந்துள்ளன. 

இந்த புகார்களை அரசு வழக்கறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதனால் அவர் மீது விரைவில் குற்ற விசாரணை தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, அமெரிக்கா மோர்சியை விடுவிக்கக் கேட்டுள்ளது. மேலும், இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியினரை கைது செய்யக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

4 comments:

  1. ஹி ஹி ஹி இந்த வார நகைச்சுவை அதுவும் அமெரிக்காவின் நகைச்சுவை. இதுபோன்ற செய்திகளை அமெரிக்க ஜனாதிபதியிடம் அல்லது இலங்கை பயங்கரவாதிகள் பொதுபலசேனவிடம் போய்ச்சொல்லுங்கள் அவர்கள் நம்புவார்கள்....

    ReplyDelete
  2. ஆடு நலயுதேன்னு ஓநாய் அழுதிட்சாம்

    ReplyDelete
  3. நீங்க என்ன கோரிக்கை விட்டாலும் பின்னால் நின்று ஆட்டுவிப்பது நீங்கள் என்பது நாங்கள் அறிந்த உண்மை. எங்களுக்குத் தெரிந்த உண்மை அப்பாவி முர்சிக்கும், அவரது சகாக்களுக்கும் தெரிந்திருக்கவில்லை என்பது தான் ஆச்சரியம்! இந்த ராணுவ அடக்குமுறையை முர்சியின் ஆட்சிக்கு முன்னர் எதிர்பார்த்தோம். ஆனால் அது உலகை அமெரிக்காவின் பக்கம் சந்தேகிக்கா வண்ணம், முர்சியை ஆட்சியில் அமர வைத்து தற்பொழுது அரங்கேறியுள்ளது. எகிப்திய ராணுவம் அமெரிக்காவின் கைவசம் என்பதை இவர்கள் யோசிக்காதது தான் ஆச்சரியம். ஆட்சிக்கு வந்தவுடன் "மகிந்த- கோட்டா" ஸ்டைலில் தூக்க வேண்டியவர்களை தூக்கியிருக்க வேண்டும். செய்யாததன் விளைவு ராணுவ ஆட்சி. இது போன்ற நாடுகளில் ஆட்சி செய்வதற்கு அறிவு, துணிவு கொஞ்சம் தூக்கலாக, முன்யோசனையுடன் பயன்படுத்த வேண்டும். இஹ்வான்கள் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் முயோசனை இல்லாமல் செயல்படுவது மேற்கத்தயரை அந்நாட்டில் மேலும் மேலும் காலூன்ற வைக்கிறது. மக்கள் நூற்றுக்கணக்கில் மடிந்தது தான் மிச்சம். பாய்வதற்கு முன்னர் இருப்பது செற்றிலா, உறுதியான தரையிலா என்று கவனித்தால் நன்று. சேற்றில் இருந்தால் நடக்கத்தான் வேண்டும். ஏனென்றால் பாய்ந்ததால் இரண்டடி உள்ளே தான் போக நேரிடும். இதை வெறும் விமர்சனமாகச் சொல்லவில்லை அநியாயக் காரர்களிடம் ஆட்சியை அநியாயமாக கைவிட்டதை எண்ணிக் கவலையில் சொல்கிறேன்.

    ReplyDelete
  4. ihwankal islamiya reeziyil seyalpada wendiyawarhal
    mahinda gota iwarhalazu murai alla

    ReplyDelete

Powered by Blogger.