மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் - 22 பௌத்தர்களுக்கு சிறை
மியான்மரில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே உருவான கலவரத்தில் 43 பேர் கொல்லப்பட்டனர். இருதரப்பையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி, பாதுகாப்பு கருதி வேறிடங்களில் தங்கியுள்ளனர்.
இந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 புத்த மதத்தினர் மீது நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
சிலருக்கு சிறையில் கடுமையான பணி வழங்கும் படியும் நீதிபதி உத்தரவிட்டார்.

Post a Comment